எச்சரிக்கை விடுத்துள்ள உலகச் சுகாதார நிறுவனம்

எச்சரிக்கை விடுத்துள்ள உலகச் சுகாதார நிறுவனம்

ஐரோப்பாவில் கிருமித்தொற்று தீவிரமடைந்து வருவதாக, உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுபோக ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், உத்தேச நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் நாள்கள் குறைக்கப்பட்டுவருவது குறித்தும் நிறுவனம் கவலை தெரிவித்தது. இந்த மாதம் ஐரோப்பில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நோய்ப்பரவல் சம்பவங்கள், உலகமக்கள் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை மணி என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய இயக்குநர் கூறினார். உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி, நோய்த்தொற்று உள்ளவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் குறைந்து 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் … Read more

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பரவிய காட்டுத் தீயின் புகை

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பரவிய காட்டுத் தீயின் புகை

அமெரிக்காவின் மேற்குக் கரை மாநிலங்களில் பற்றி எரியும் காட்டுத் தீயின் புகை ஐரோப்பிய நாடுகளைச் சென்றடைந்துள்ளது. புகை பரவுவதை துணைக்கோளத் தகவல்களைக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் பருவநிலை கண்காணிப்பு நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா, வாஷிங்டன், ஆரெகன் ஆகிய மாநிலங்களில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ பரவியிருப்பதால் புகையின் அளவு அதிகரித்துள்ளது. அது சுமார் 8,000 கிலோ மீட்டர் தாண்டி ஐரோப்பாவின் வட பகுதியில் உள்ள நாடுகளை அடைந்துள்ளது.  

காடுகளை பற்றி சுவாரிசயமான தகவலை கூறிய ஐக்கிய நாட்டு நிறுவனம்

காடுகளை பற்றி சுவாரிசயமான தகவலை கூறிய ஐக்கிய நாட்டு நிறுவனம்

காடுகள் அழிக்கப்படும் வேகம் குறைந்துள்ளதாகத் ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் உலகின் காடுகளில் 100 மில்லியன் ஹெக்டர் அழிக்கப்பட்டுள்ளதாக மொத்த நிலப்பரப்பில் காடுகளின் விகிதம் 2000ஆம் ஆண்டில் 31.9 விழுக்காடாக இருந்தது. தற்போது அது 31.2விழுக்காடாக உள்ளது. உலகின் காடுகளில் 100 மில்லியன் ஹெக்டர் அழிக்கப்பட்டதை அது குறிப்பதாக உணவு வேளான்மை அமைப்பு தெரிவித்தது. சஹாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்பிரிக்க நாடுகள், தென்கிழக்காசியா ஆகிய பகுதிகளில் ஆக அதிகமாகக் காடுகள் அழிக்கப்பட்டன.  

25 விழுக்காடு மட்டுமே இயங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்

25 விழுக்காடு மட்டுமே இயங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்

நோய்ப்பரவல் காலத்தில் விமானப் பயணங்கள் குறித்த அச்சத்தால் வழக்கநிலை திரும்பும் அறிகுறிகள் தென்படவில்லை என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸ் குருஸ் தெரிவித்தார். பிரிட்டிஷ் ஏர்வேஸ்  நிறுவனம், அடுத்த சில மாதங்களுக்குத் தாக்குப்பிடிக்க, தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நிறுவனத்தின் விமானச்சேவையில் 25 விழுக்காடு மட்டுமே இயங்குவதால் பல்லாயிரம் வேலைகளை நிறுத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாய் அவர் கூறினார். நிறுவனத்தின் 100 ஆண்டு வரலாற்றில் ஏற்பட்டுள்ள ஆக மோசமான நெருக்கடி இது என்று குறிப்பிட்ட திரு அலெக்ஸ், நிறுவனத்தைக் … Read more

அமெரிக்க பிரபலங்கள் கூறிய அதிர்ச்சி தகவல்கள்

அமெரிக்க பிரபலங்கள் கூறிய அதிர்ச்சி தகவல்கள்

பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதைத் தடைசெய்யும் மற்றோர் இயக்கத்தில், ஜூலை மாத நிலவரப்படி, 1,000 நிறுவனங்கள் சேர்ந்துள்ளன. சமூக ஊடகத் தளங்களில் பகைமை, பொய்த் தகவல் ஆகியவற்றுக்கு எதிராக பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிம் கார்டேஷியன், லியோனார்டோ டி காப்ரியோ, மைக்கல் ஜோர்டன் உள்ளிட்ட பிரபலங்கள் இன்று தங்களுடைய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்  பக்கங்களில் எதையும் பதிவு செய்யப்போவதில்லை மற்றும் “Stop Hate for Profit” எனும் இயக்கத்தின் ஓர் அங்கமாக சமூக ஊடகங்களில் இன்று பதிவிடப் … Read more

இத்தாலியில் ஏற்பட்ட தீவிபத்தால் பதற்றம்

இத்தாலியில் ஏற்பட்ட தீவிபத்தால் பதற்றம்

அன்கோனா நகரத் துறைமுகம் இத்தாலியில் உள்ளது அங்கு பெரிய அளவில் தீ ஏற்பட்டுள்ளது.  துறைமுகத்தில் இருந்த சரக்குக் கிடங்குகளும், வாகனங்களும் அழிந்தன. உயிர்ச்சேதம் குறித்த தகவல் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் கூறினர். நள்ளிரவில் வெடிப்பு நேர்ந்தது. 16 தீயணைப்புக் குழுக்கள் நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. வெடிப்பு நேர்ந்ததற்கான காரணம் தெரியவில்லை. அன்கோனா வட்டாரக் கிடங்குகளில்,எளிதில் தீப்பற்றும் திரவம் சேமித்து வைக்கப்படுவது வழக்கம். வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அனைத்துப் … Read more

தடுப்பு மருந்து திட்டத்திற்கு இத்தனை மில்லியன் டாலரா

தடுப்பு மருந்து திட்டத்திற்கு இத்தனை மில்லியன் டாலரா

நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்காக ஜப்பானிய அரசாங்கம் ஒன்றரை டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி ஒதுக்கியது. அதிலிருந்து உலக சுகாதார நிறுவனத்துக்கு நிதியளிக்கப்படும். உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பு மருந்து திட்டத்திற்கு 165 மில்லியன் டாலர் நிதி வழங்க ஜப்பான் உறுதிகூறியுள்ளது. உலகம் முழுவதும் தடுப்பு மருந்துகள் நியாயமாகவும் சிறந்த முறையிலும் விநியோகிக்கப்படுவதை COVAX திட்டம் உறுதிசெய்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள், இருதரப்பு ஒப்பந்தங்களின் மூலம் சொந்த தடுப்பு மருந்துகளைப் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. உலகளாவிய மருந்து … Read more

மாஸ்குக்கு பதில் பாம்பை அணிந்த வந்த நபர்

மாஸ்குக்கு பதில் பாம்பை அணிந்த வந்த நபர்

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன. தற்போதுதான் முடக்கங்கள் தளர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனாலும் அனைத்து நாடுகளிலும் மாஸ்க் அணிவது கட்டயமாக்கப்பட்டது. அந்த வகையில் பிரிட்டனில் வித்தியாசமான ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பேருந்தில் பயணம் செய்யும் ஒரு நபர் மாஸ்க் அணிவதற்கு பதிலாக பாம்பையே மாஸ்காக அணிவித்துள்ளார். இது சக … Read more

டிரம்ப் மீது நம்பிக்கை இழந்த மக்கள்

டிரம்ப் மீது நம்பிக்கை இழந்த மக்கள்

அமெரிக்காவின் நற்பெயர் மற்ற வல்லரசு நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைந்துள்ளதாகக் கருத்தாய்வு கூறுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் பியூ ஆராய்ச்சி மையம் கருத்தாய்வை  நடத்தியது. 13 நாடுகளைச் சேர்ந்த 13,273 பேர் அதில் பங்கேற்றனர். அமெரிக்கா முழுவதும் இனவாதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்து வந்த நேரத்தில் அந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டது. கிருமித்தொற்றைக் கையாண்ட விதம் அமெரிக்காவின் நற்பெயர் குறைவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருத்தாய்வில் தெரியவந்துள்ளது. நோய்த்தொற்றால் உலக அளவில் ஆக அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள … Read more

ஹாங்காங்கில் 2 மில்லியன் பேர் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி

ஹாங்காங்கில் 2 மில்லியன் பேர் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல துறைகளும் முடக்கத்தில் இருந்தன. தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி வருகின்றன. அந்த வகையில் அண்மையில் ஹாங்காங்கில் நோய்த்தொற்றுக்கான பரிசோதனை பெரிய அளவில் நடத்தப்பட்டது. அதில் சுமார் 2 மில்லியன் பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 42 பேருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டது. இப்போது நோய்ப்பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோம். இதன் காரணமாக மூடப்பட்ட மதுபானக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் ஆகியவை மீண்டும் திறக்கப்படவுள்ளன.