ஹாலிவுட் படங்களில் வருவது போன்று கடலில் ஏற்பட்ட அபூர்வ காட்சி

ஹாலிவுட் படங்களில் வருவது போன்று கடலில் ஏற்பட்ட அபூர்வ காட்சி

லூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் மேற்கு புளோரிடா பகுதிகளில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லூசியானா மாகாணத்தின் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றிருந்தவர்கள் கடலில் பேரதிசயத்தைக் கண்டனர். அமெரிக்கா கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசய காட்சி வெளியாகி உள்ளது.  ஒரே நேரத்தில் அருகருகே 6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தது. ஹாலிவுட் படங்களில் வருவது போன்று இந்தக் காட்சி இருந்ததாக இதனைப் படம் பிடித்தவர்கள் … Read more

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மிகவும் கொடூரமானவர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மிகவும் கொடூரமானவர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் சகோதரி மேரி ஆன் தமது சகோதரர் டொனால்டு டிரம்ப் கொடூரமானவர், கொள்கையற்றவர் என பேசியுள்ள ஆடியோ பதிவு ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகையில் பொறுப்பான ஒரு பதவியில் இருந்து கொண்டு நாளுக்கு நாள் டிரம்ப் பொய் பேசுவதாகவும், அவருக்கு கொள்கை என்பதே இல்லை எனவும் மேரி ஆன் காட்டமாக தெரிவித்துள்ளார். உலகின் கொடூரமான மனிதனை என் குடும்பம் எப்படி உருவாக்கியது என டிரம்பை குறிவைத்து மேரி டிரம்ப் புத்தகம் … Read more

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் முன்னேறியது ரஷ்யா

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் முன்னேறியது ரஷ்யா

உலகிலேயே அதிகமாக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருந்த ரஷ்யா தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தற்பொழுது வரை இரண்டாவது இடத்தில் இருந்த சவுதி அரேபியா மூன்றாவது இடத்திற்கு சென்றது. இதனால் உலகளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு பட்டியல் இரண்டாவது இடத்தில் ரஷ்யா உள்ளது.உண்மையில் உலக நாடுகளுக்கு இடையே நடக்கும் மோதல்களில் எண்ணையை மையமாக வைத்தே தற்பொழுது வரை நடைபெற்று வந்திருக்கிறது. எண்ணை வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடு, உலகில் வெற்றிகரமான நாடு … Read more

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்படுத்த அனுமதி

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்படுத்த அனுமதி

அவசர கால சிகிச்சைக்கு புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை பயன்படுத்த சீனா அரசு அனுமதி அளித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்டு, சீனா நோயிலிருந்து மீண்டு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். உலகையே ஆட்டுவிக்கும் இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு கட்டங்களில் உள்ள நிலையில், சீனா அவசர பயன்பாட்டுக்காக தடுப்பூசி பரிசோதனையை கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. சீனாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி உள்ளூர் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு பரிசோதனை … Read more

பேரிடராக அறிவித்த அதிபர் டோனல்ட் டிரம்ப்

பேரிடராக அறிவித்த அதிபர் டோனல்ட் டிரம்ப்

அதிபர் டோனல்ட் டிரம்ப் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் மூண்டுள்ள காட்டுத்தீயை, பேரிடர் என்று அறிவித்துள்ளார். அங்கு பற்றி எரியும் தீயை அணைக்கத் தேவையான நிதியை, மத்திய அரசு வழங்குமென அவர் அறிவித்தார். சுமார் ஒரு மில்லியன் ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தில் காட்டுத் தீ மூண்டுள்ளது. அதைக் கட்டுப்படுத்த, 14,000க்கும் அதிகமான தீயணைப்பாளர்கள் போராடி வருகின்றனர். பலத்த காற்று வீசும் என்று முன்னுரைக்கப்பட்டிருப்பதால், காட்டுத் தீ, மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களுக்குப் பரவக் கூடுமென்ற அச்சம் எழுந்துள்ளது. காட்டுத் … Read more

உலகம் முழுவதும் இத்தனை கோடி பேர் குணமடைந்துள்ளனரா?

உலகம் முழுவதும் இத்தனை கோடி பேர் குணமடைந்துள்ளனரா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் … Read more

இளவரசரின் மாளிகை இத்தனை கோடிக்கு விற்பனையா?

இளவரசரின் மாளிகை இத்தனை கோடிக்கு விற்பனையா?

மகாராஜா ரஞ்சித் சிங்கின் இளைய மகனான துலீப் சிங் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய துணை கண்டத்தின் வடமேற்கு பகுதியை ஆட்சி செய்தார். துலீப் சிங்தான், பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் சீக்கிய பேரரசின் கடைசி மன்னராக இருந்தார். இவர் ஆட்சியை பிரிட்டிஷ் கைப்பற்றியதால் துலீப் சிங் இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு 1866-ம் ஆண்டு இளவரசர் விக்டர் ஆல்பர்ட் ஜே துலீப் சிங் பிறந்தார். அழகான மற்றும் துணிச்சலான இளவரசராக அறியப்பட்ட விக்டர் 1898-ம் ஆண்டு ஆங்கிலேய … Read more

70 மில்லியன் டாலர் திரட்டப்பட்ட கட்சி மாநாடு

70 மில்லியன் டாலர் திரட்டப்பட்ட கட்சி மாநாடு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் ஜோ பைடன், துணையதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் திருவாட்டி கமலா ஹேரிஸ் கூட்டணி தங்கள் பிரசாரத்திற்கு 70 மில்லியன் டாலர் திரட்டியுள்ளனர். கட்சியின் 4 நாள் தேசிய மாநாட்டில் அந்த நிதி திரட்டப்பட்டது. மாநாட்டின் ஒளிபரப்பை இணையத்தின் மூலம் 122 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். தொலைக்காட்சியில் 85.1 மில்லியன் பேர் பார்த்ததாக பைடன் பிரசாரக் குழு தெரிவித்தது. கடந்த மாதம் நடந்த நிதித்திரட்டு நடவடிக்கைகளில் 140 மில்லியன் டாலர் … Read more

24 மணி நேரத்தில் 2,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

24 மணி நேரத்தில் 2,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் ஜெர்மனியில் 2,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் மாத இறுதிக்குப் பிறகு பதிவான சம்பவங்களில், அதுவே ஆக அதிகம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 232,000-ஐத் தாண்டியது. ஜெர்மனியில், அண்மை நாள்களில் அன்றாடக் கிருமித்தொற்று எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கிருமிப்பரவல் ஆபத்து அதிகம் உள்ள சில பகுதிகளிலிருந்து திரும்பும் மக்கள், கிருமியைப் பரப்பியிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

பலியானவர்களின் எண்ணிக்கையில் இந்த நாடு மூன்றாவது இடமா?

பலியானவர்களின் எண்ணிக்கையில் இந்த நாடு மூன்றாவது இடமா?

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. கொரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  அமெரிக்காவில் 1 லட்சத்து 76 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும், பிரேசிலில் 1 லட்சத்து 14 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். இந்த இரு நாடுகளை தொடர்ந்து பலி எண்ணிக்கையில் 3வது இடத்தில் மெக்சிகோ உள்ளது.  … Read more