ஊழல் வழக்கு! முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை.

Corruption case! Former PM jailed for 12 years.

உலகெங்கும் ஊழல்கள் தலைவிரித்தாடும் நிலையில் முன்னாள் பிரதமர் ஊழல் செய்த வழக்கில் 12 ஆண்டுகள் சிறை கிடைத்துள்ளது. மலேசியாவின் முன்னாள் பிரதமரான நஜீப் ரசாக்குக்குதான் தான் 12 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. அவர் சுமார் 264 கோடி மலேசியாவின் ரிங்கிட் மதிப்பில் ஊழல் செய்திருந்தார். இது இந்திய ரூபாயில் சுமார் 4 ஆயிரத்து 150 கோடி ரூபாயாகும். இதனை மலேசியாவின் மேம்பாட்டு நிதிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில்தான் அவர் ஊழல் செய்துள்ளார். நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட வங்கி கணக்கில் … Read more

கொரோனா எதிரொலி : ஒரு முறை விமானச் சீட்டு வாங்கினால் பல முறை பயணம் செய்யலாம் எங்கே தெரியுமா?

கொரோனா எதிரொலி : ஒரு முறை விமானச் சீட்டு வாங்கினால் பல முறை பயணம் செய்யலாம் எங்கே தெரியுமா?

உலகெங்கும் COVID-19 நோய்த்தொற்று பரவியுள்ள நிலையில், பல விமான நிறுவனங்கள் இனி மீண்டும் செயல்பட முடியுமா என்ற நிலையில் தவித்துக்கொண்டிருக்கின்றன. சீனாவில் விமானப் பயணிகளை ஈர்க்க அதிரடிச் சலுகைகளை வழங்கி வருகின்றன, அந்நாட்டு விமான நிறுவனங்கள். கொரோனா கிருமித்தொற்றால் நொடித்துப் போன விமானத்துறையை மீட்க கட்டணத்தைப் பல மடங்கு குறைத்துள்ளன; விமானப் பயணங்களை பயணிகள் மீண்டும் தொடர, நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு சலுகைகளை வாரி வழங்குகின்றன. இதுவரை 8 உள்நாட்டு விமான நிறுவனங்கள் சலுகைகள் பற்றி அறிவித்துள்ளன. … Read more

தடுப்பு மருந்தைத் தயாரிப்பதில் முன்னேற்றம்

தடுப்பு மருந்தைத் தயாரிப்பதில் முன்னேற்றம்

கொரோனா கிருமித்தொற்றுக்கான தடுப்பு மருந்தைத் தயாரிப்பதில் முன்னேற்றம் கண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். நவம்பரில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு முன்னர், அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்து சாத்தியம் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார். நார்த் கரோலைனாவில், சாத்தியமான தடுப்பு மருந்துக்குரிய பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனத்தைத் டிரம்ப் முகக் கவசம் அணிந்தவாறு பார்வையிட்டார். ஆனால், தடுப்பு மருந்து நோயைக் குணப்படுத்துவதில் எந்த அளவு பங்காற்றும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று வல்லுநர்கள் கூறினர். … Read more

நியூஸிலாந்து ஹாங்காங்குடன் செய்திருந்த உடன்பாடு ரத்து

நியூஸிலாந்து ஹாங்காங்குடன் செய்திருந்த உடன்பாடு ரத்து

நியூஸிலாந்து, குற்றவாளிகளையும், சந்தேக நபர்களையும் ஒப்படைப்பதன் தொடர்பில் ஹாங்காங்குடன் செய்திருந்த உடன்பாட்டைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. அண்மையில், சீனா, ஹாங்காங்கில் புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதன் எதிரொலியாக, குற்றவாளிகளை ஒப்படைக்கும் உடன்பாட்டில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக நியூஸிலாந்து வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் (Winston Peters) கூறினார். ராணுவ ஒப்பந்தம், ராணுவத்துக்கும், மக்களுக்கும் பயன்படும் பொருள்கள், ஹாங்காங்குக்கான தொழில்நுட்ப ஏற்றுமதி ஆகியவற்றின் தொடர்பிலும் அதேபோன்ற மாற்றங்கள் செய்யப்படும் என்று அவர் சொன்னார். புதிய தேசியப் … Read more

கரடி பொம்மையை தேடிக் கொடுக்க முன்வந்துள்ள பிரபலங்கள்

கரடி பொம்மையை தேடிக் கொடுக்க முன்வந்துள்ள பிரபலங்கள்

சிவப்பு, வெள்ளை நிற உடை, ஒரு மூக்குக் கண்ணாடி. அவையே, காணாமல்போன ஒரு கரடி பொம்மையின் அடையாளங்கள். ஒரு கரடி பொம்மைக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா என்று சிலர் எண்ணலாம். கனடாவைச் சேர்ந்த குமாரி மாரா சொரியானோவிற்கு அது சென்ற ஆண்டு புற்றுநோயால் இறந்துபோன தம் அம்மா கொடுத்த கடைசிப் பரிசு. அதில் அவருடைய தாயின் குரல் பதிவாகியுள்ளது. தம் அம்மாவின் நினைவு வரும்போதெல்லாம், கரடி பொம்மையைக் கட்டி அணைத்துக்கொள்வேன் என்று குமாரி மாரா CNN செய்தி நிறுவனத்திடம் … Read more

பிரதமரின் ஊழல் நிரூபணம் : 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

பிரதமரின் ஊழல் நிரூபணம் : 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு, 1MDB ஊழல் தொடர்பான முதல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 210 மில்லியன் ரிங்கிட் இந்திய மதிப்பில் சுமார் 370 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக அவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது. 1MDB முதலீட்டு நிதியிலிருந்து அவரது சொந்த வங்கிக் கணக்குக்கு 10 மில்லியன் டாலர் தொகை மாற்றிவிடப்பட்டது உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. சுமார் ஈராண்டுகளுக்குப் பிறகு நஜிப் மீதான வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த பல … Read more

பிரதமர் மீதான ஊழல் வழக்கில் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன

பிரதமர் மீதான ஊழல் வழக்கில் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன

1MDB ஊழல் தொடர்பான முதல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றவாளி என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, 1MDB முதலீட்டு நிதியிலிருந்து  நஜிப்பின் சொந்த வங்கிக் கணக்குக்கு 10 மில்லியன் டாலர் தொகை மாற்றிவிடப்பட்டது உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. சுமார் ஈராண்டுகளுக்குப் பிறகு நஜிப் மீதான வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாகப் பல்வேறு நபர்களிடம் 1MDB முதலீட்டு நிதி முறைகேடு தொடர்பில் அரசாங்கத் தரப்பு வழக்குரைஞர்கள் குறுக்கு … Read more

கொரோனா நோய்த்தொற்றை அடையாளம் காண நாய்களுக்குப் பயிற்சி

கொரோனா நோய்த்தொற்றை அடையாளம் காண நாய்களுக்குப் பயிற்சி

சிலியின் காவல்துறையில் உள்ள மோப்ப நாய்களுக்கு, மனிதர்களிடையே கொரோனா நோய்த்தொற்றை அடையாளம் காணப் பயிற்சியளிக்கப்படுகிறது. பேரங்காடிகள், விமான நிலையங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் ஆகிய பொது இடங்களை மீண்டும் சுமூகமாகத் திறப்பதில் அந்த மோப்ப நாய்கள் பெரும்பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நோயாளிகளை வாசனையின் மூலம் அடையாளம் காணத் தற்போது, 4 நாய்க்குட்டிகளுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. ஆனால், அவ்வாறு முகர்வதன் மூலம் நாய்களால் கொரோனா கிருமித்தொற்றை அடையாளம் காண முடியும் என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. இருப்பினும், முன்னர், புற்றுநோய், … Read more

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் கொரோனா

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் கொரோனா

ஆஸ்திரேலியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கொரோனா நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இன்று மட்டும் அங்கு 549 பேருக்கு புதிதாகக் கொரோனா கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விக்டோரியா மாநிலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் மெல்பர்ன் நகரில் முடக்கம் நடப்பிலிருந்தாலும் நோய்ப்பரவல் குறைந்ததாகத் தெரியவில்லை. மெல்பர்னில் இரண்டாம் கட்ட கிருமிப்பரவல் ஏற்பட்டுள்ளதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். கடந்த மூன்று வாரமாக ஆஸ்திரேலியாவில் கிருமிப்பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இனிவரும் நாள்களில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமானோர் அடையாளம் காணப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் … Read more

சீனாவில் அமெரிக்க தூதரகம் மூடல்! தொடரும் பரபரப்பு

China Closed US embassy

அமெரிக்காவில் அமைந்துள்ள தங்களது தூதரகத்தின் உதவியுடன் அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகள்,தனிநபர்களின் தகவல்கள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான ஆராய்ச்சிகள் உள்ளிட்ட தகவல்களை சீனா திருட முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியது. இதனையடுத்து இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள சீன தூதரகத்தை உடனடியாக மூட ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த சீனா அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிரானது … Read more