இப்படி ஒரு சானிடைசர் மிஷினா? ஆச்சரியமூட்டும் தயாரிப்பு!

sanitizer machine

கொரோனா நோய்தொற்றின் பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம்,சானிடைசர் உபயோகிப்பது அவசியம்.கடைகளுக்கு, அலுவலகத்திற்கு சென்றால் கைகளில் சானிடைசர் ஊற்றி தூய்மைப்படுத்த சொல்கின்றார்கள். பெரிய நிறுவனங்கள், அலுவலகங்களில் திரவ சோப்பை, கைகழுவும் இடத்தில் வைத்திருக்கிறார்கள்.  திரவ சோப்பை, கைகளில் தடவி தண்ணீர் குழாய்களை திறந்து கை கழுவி கொள்கிறோம். குழாய்களைத் திறக்கும்போது கையில் உள்ள வைரஸ் ஒட்டிக் கொண்டாள், அடுத்து கைகழுவ குழாயை திறப்பவர்களின் கையில் ஒட்டி தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த பிரச்சினையை தீர்க்கும் விதமாக ஆப்பிரிக்காவின் … Read more

உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 652308 ஆக உயர்ந்துள்ள அபாயம்!!

உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 6.52 லட்சத்தையும் கடந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல நாடுகளை முடக்கி வைத்துள்ளது.உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை அடுத்து 3 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. உலக அளவில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பும், கரோனா பலியும் கட்டுப்படுத்த முடியாத வகையில் உயர்ந்து மக்களை அச்சத்தில் … Read more

முதலீட்டை இரட்டிப்பாக்கியுள்ளது அமெரிக்கா

முதலீட்டை இரட்டிப்பாக்கியுள்ளது அமெரிக்கா

அமெரிக்கா, கொரோனா கிருமித்தொற்றுக்கான தடுப்பு மருந்தை உருவாக்குவதற்காக செய்த அதன் முதலீட்டை இரட்டிப்பாக்கியுள்ளது. தடுப்பு மருந்தை உருவாக்குவதில் தீவிரமாக செயல்பட்டும் Moderna நிறுவனத்துக்கு அமெரிக்க அரசாங்கம் சுமார் ஒரு பில்லியன் டாலர் வரை வழங்குகிறது. இறுதிகட்ட பரிசோதனைகளைத் தொடங்கவிருக்கும் Moderna நிறுவனத்துக்கு இதற்குமுன் 483 மில்லியன் டாலர் வழங்கப்பட்டது. தற்போது அதற்கும் மேல் 472 மில்லியன் டாலரை வழங்கவிருப்பதாக அமெரிக்க அரசாங்கம் குறிப்பிட்டது. மூன்றாம் கட்ட பரிசோதனைகளை சுமார் 30 ஆயிரம் பேரிடம் நடத்தவிருக்கும் Moderna நிறுவனம், … Read more

வடகொரியாவில் முதல் கொரோனா தொற்று

வடகொரியாவில் முதல் கொரோனா தொற்று

வடகொரியாவில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என வடகொரியா தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், அங்கு முதன்முறையாக ஒரு நபருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே எல்லைகள் அனைத்தையும் மூடியதோடு, சர்வதேச பயணிகளுக்கு தடை விதித்ததால் இது சாத்தியமானதாக வடகொரியா கூறியது. வடகொரியாவில் தென் கொரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள கேசாங் நகரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் … Read more

அமெரிக்காவை தாக்கிய புயல்

அமெரிக்காவை தாக்கிய புயல்

ஹன்னா என்ற சக்தி வாய்ந்த புயல் அமெரிக்காவில் கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெக்சாஸ் மாகாணத்தை தாக்கியது. அட்லாண்டிக் கடலில் உருவான இந்த புயல், தெற்கு டெக்சாசின் பாட்ரே தீவை நேற்று முன்தினம் மாலை தாக்கியது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது. இதில் வீடுகள் மற்றும் கடைகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சாலையில் சரிந்து விழுந்தன. புயலை தொடர்ந்து டெக்சாசின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கன … Read more

கங்காரு வடிவமிட்டுப் பயணத்தை முடித்த விமானம்

கங்காரு வடிவமிட்டுப் பயணத்தை முடித்த விமானம்

ஆஸ்திரேலிய விமான நிறுவனமான Qantas அதன் போயிங் 747 ரக விமானத்தின் கடைசிப் பயணத்தைச் சென்ற வாரம் புதன்கிழமையன்று இனிதே நடத்தி முடித்தது. நிறுவனத்தின் சின்னமாகிய கங்காரு வடிவத்தை ஆகாயத்தில் அமைத்தவாறு பறந்தது அந்த விமானம். அந்த அதிசய சாகசத்தைக் காண மக்கள் சிட்னி விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். கொரோனா கிருமிப்பரவலால் விமானச் சேவைகளுக்கான தேவை குறைந்துள்ளது. அதனால், Qantas நிறுவனத்தின் 747 ரக விமானங்கள் திட்டமிட்டதற்கு 6 மாதம் முன்னதாகவே ஓய்வுபெற்றுள்ளன. இரண்டாம் எலிசபெத் அரசியார் … Read more

பூடான் பகுதிக்கு உரிமை கொண்டாடும் சீனா

பூடான் பகுதிக்கு உரிமை கொண்டாடும் சீனா

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூடானிலும் சீனா, தனது வழக்கமான  வேலையை காட்டியுள்ளது.    பூடானில் உள்ள சக்தேங் வனவிலங்கு சரணாலயத்திற்கு அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனம் மூலம் நிதி திரட்டும் பணியில் பூடான் இறங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, சக்தேங் சரணாலயத்தின் ஒரு பகுதி தங்களுக்கு சொந்தமானது என கூறி பூடானுக்கு அதிர்ச்சி கொடுத்தது. சீனாவின் இந்த நிலைப்பாட்டை பூடான் மிக கடுமையாக எதிர்த்துள்ளது. பூடானும் சீனாவும் எல்லைப் பிரச்சினையை பரஸ்பரம் தீர்த்துக்கொள்ள 1984- … Read more

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளேன்! பிரேசில் அதிபர் அறிவிப்பு

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளேன்! பிரேசில் அதிபர் அறிவிப்பு

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ. இவருக்கு கடந்த 10 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். ஒரு வாரத்திற்கு மேலாக தனிமைப்படுத்திக்கொண்ட பிறகு கடந்த 15 ஆம் தேதி போல்சோனரோ 2-வது முறையாக கொரோனா பரிசோதனை செய்தார். அப்போதும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு விரைவில் மீண்டும் பரிசோதனை செய்வேன் என போல்சனேரோ கூறியிருந்தார். அதிபர் போல்சனேரோவுக்கு … Read more

துப்பாக்கிச்சூடு நடத்திய பள்ளி மாணவனுக்கு 38 ஆண்டுகள் சிறை

துப்பாக்கிச்சூடு நடத்திய பள்ளி மாணவனுக்கு 38 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவின் கொலராடோ மாநிலப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய பள்ளி மாணவனுக்கு ஆயுள் தண்டனையுடன் 38 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அலெக் மெக்கென்னி  என்னும் 17 வயது மாணவர் கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி டென்வர் வட்டாரப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தினார். சம்பவத்தில் 18 வயது மாணவர் இறந்ததுடன் 8 பேர் காயமடைந்தனர். பிப்ரவரி மாதம் நடந்த விசாரணையில் மெக்கென்னி கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தாம் செய்த குற்றத்திற்கு மனம் வருந்துவதாகவும் தமக்குப் பெரிய … Read more

மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதிகரித்த கொரோனா வைரஸ்

மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதிகரித்த கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிவரும் நிலையில் தென் கொரியாவில் நேற்று புதிதாக 113 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  கடந்த மூன்று மாதங்களில் பதிவான  அதிக எண்ணிக்கை இதுவாகும். புதிதாக பாதிக்கப்பட்டோரில் 86 பேர், வெளிநாடுகளிலிருந்து தென் கொரியா சென்றவர்கள். ஈராக்கிலிருந்து தாயகம் திரும்புவோரும், புசான் நகரில் கரையொதுங்கிய ரஷ்ய மீன் பிடிப் படகைச் சேர்ந்த கடலோடிகளும் அவர்களில் அடங்குவர். பயணிகள், கொரோனா கிருமி தொற்றவில்லை என்பதை உறுதிப்படுத்தும் மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டிய நாடுகளின் பட்டியலில் … Read more