அடடே.. அம்மான் பச்சரிசி இலை நம் உடலுக்கு இத்தனை நன்மைகளை வாரி வழங்குகிறதா..?
பராமரிப்பு இன்றி சுலபமாக வளரக் கூடிய மூலிகை தாவரங்களில் ஒன்று அம்மான் பச்சரிசி. இவை அதிக குளிர்ச்சி நிறைந்த மூலிகை ஆகும். இவை நம் உடலுக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.
அம்மான் பச்சரிசி மூலிகையின் பயன்கள்:-
*தேவையான அளவு அம்மான் பச்சரிசியின் பூக்களை எடுத்து சுத்தம் செய்து பசும்பால் விட்டு அரைத்து பாலில் கலந்து அருந்தினால் தாய்ப்பால் சுரக்கும்.
*மலச்சிக்கல் நீங்க அம்மான் பச்சரிசி இலையுடன் சிறிது பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வரலாம்.
*அம்மான் பச்சரிசி இலையை உலர்த்தி பொடி செய்து நீரிலில் கலந்து அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.
*அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்து விடும்.
*இதன் இலையை உலர்த்தி பொடியை வெந்நீரில் கலந்து அருந்த சளி, இருமல் குணமாகும்.
*அம்மான் பச்சரிசி இலையை உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
*அம்மான் பச்சரிசி இலை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் அல்சர் பாதிப்பு குணமாகும்.
*இரத்தத்தில் உள்ள கெட்ட கழிவுகள் வெளியேற அம்மான் பச்சரிசி இலையுடன் மிளகு, வேப்பிலை சேர்த்து அரைத்து காலையில் சாப்பிட்டு வரலாம்.
*அம்மான் பச்சரிசியை அரைத்து மோரில் கலந்து குடித்தால் உடல் உஷ்ணம் குறையும்.
*காலையில் வெறும் வயிற்றில் அம்மான் பச்சரிசி இலை பொடியை சாப்பிட்டு வந்தால்
வாய்ப்புண் குணமாகும்.
*அம்மான் பச்சரிசி பொடியை தேங்காய் எண்ணெயில் சேர்த்து குழைத்து பாதகங்களில் தடவி வர பாத வெடிப்பு நீங்கும்.