அடடே.. நீர்க்கட்டி பிரச்சனைக்கு இயற்கை வழியில் இத்தனை எளிய தீர்வு இருக்கிறதா..?

0
163
#image_title

அடடே.. நீர்க்கட்டி பிரச்சனைக்கு இயற்கை வழியில் இத்தனை எளிய தீர்வு இருக்கிறதா..?

பெண்களின் உடலில் கருப்பை அதாவது சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. சினைப்பையில் இருந்து சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தினால் முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டு நீர்க்கட்டிகள் உருவாகின்றது.

நீர்க்கட்டிகள் உருவானால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படும் அபாயம் ஏற்படும். இதற்கு உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இவ்வாறு பெண்களுக்கு பெரும் பாதிப்பாக இருக்கும் இந்த நீர்க்கட்டி பிரச்சனையை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை பின்பற்றவும்.

1)கழற்சிக்காயின் உள்ளிருக்கும் பருப்புடன் சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டு வர நீர்க்கட்டி பிரச்சனை சரியாகும்.

2)பச்சிலை இலையை அரைத்து மோரில் கலந்து அருந்தி வந்தால் நீர்க்கட்டி பாதிப்பு குணமாகும்.

3)வெந்தயம் 1 ஸ்பூன் அளவு நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கட்டி கரைந்து விடும்.

4)இலவங்கப்பட்டையை அரைத்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் நீர்க்கட்டி பிரச்சனை தீரும்.

5)ஆளிவிதையை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கட்டி பாதிப்பு குணமாகும்.

6)அம்மான் பச்சரிசி இலையை உலர்த்தி பொடியாக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்தி வந்தால் நீர்க்கட்டி எளிதில் கரைந்து விடும்.

7)மலைவேம்பை அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி காலை நேரத்தில் சாப்பிட்டு வர நீர்க்கட்டி பாதிப்பு குணமாகும்.