மஞ்சள் அலர்ட்.. அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

Photo of author

By Divya

மஞ்சள் அலர்ட்.. அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

Divya

மஞ்சள் அலர்ட்.. அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

கடந்த சில தினங்களுக்கு முன் மிக்ஜாம் புயலால் வட தமிழக மாவட்டங்கள் ஒரு ஆட்டம் கண்டது. அதன் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது தென்கிழக்கு அரபிக்கடல் அருகே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, விருதுநகர், மதுரை, திருவாரூர், சிவகங்கை, தஞ்சாவூர், நாகை, தென்காசி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, காரைக்கால், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, திண்டுக்கல், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:-

கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால்.