“மஞ்சள் + புளி” போதும்.. இனி ஆயுசுக்கும் மூட்டு வலி வரவே வராது..!!

0
56
#image_title

“மஞ்சள் + புளி” போதும்.. இனி ஆயுசுக்கும் மூட்டு வலி வரவே வராது..!!

இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறுவர்களை வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் ஆகுவதே முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம். இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

மூட்டு வலி வரக் காரணங்கள்:-

*ஆரோக்கியமற்ற உணவு

*ஜவ்வு தேய்மானம் ஆகுதல்

*எலும்பு தேய்மானம் ஆகுதல்

*வயது மூப்பு

*வேலை பளு

*உடல் பருமன்

தேவையான பொருட்கள்:-

*கல் உப்பு

*மஞ்சள் தூள்

*புளி

*நல்லெண்ணெய்

செய்முறை:-

ஒரு உரலில் கல் உப்பு சேர்த்து கொரகொரப்பாக இடிக்கவும். அடுத்து எள் எண்ணெய் 1 தேக்கரண்டி, சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து இடிக்கவும். இறுதியாக எடுத்து வைத்துள்ள புளியை அந்த கலவையில் நன்கு கலக்கி மூட்டுகளில் வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தம் கொடுக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வருவதன் மூலம் மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் சரியாகி மூட்டு வலுவாக இருக்கும்.