தோசை சாப்பிட்டும் மூட்டு வலியை போக்கலாம்..!

0
310
#image_title

தோசை சாப்பிட்டும் மூட்டு வலியை போக்கலாம்..!

வயதான பின் ஏற்படக் கூடிய அனைத்து நோய் பாதிப்புகளும் இன்றைய கால மோசமான வாழ்க்கை முறையால் இளம் வயதில் ஏற்படுகிறது.

30 வயதிற்குள் மூட்டு வலி, சர்க்கரை, நெஞ்சு வலி.. என அனைத்தையும் சந்திக்கும் நிலைக்கு இளைய தலைமுறையினர் தள்ளப்பட்டு விட்டனர்.

மூட்டு வலி…

மூட்டு எலும்புகள் வலுவிழந்து மூட்டு பகுதியில் வலி, எலும்பு தேய்மானம், ஜவ்வு தேய்மானம், வீக்கம் என பல தொந்தரவுகள் ஏற்படுகிறது.

மூட்டு தொடர்பான அனைத்து பாதிப்புகளும் நீங்க முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

முடக்கத்தான் ரெசிபி: பொரியல், சூப், தோசை, ஜூஸ், வடை என பல வகைகளில் செய்து சாப்பிடலாம்.

இதில் முடக்கத்தான் கீரை தோசை செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தேவையான பொருட்கள்…

*முடக்கத்தான் கீரை
*மிளகு
*சீரகம்
*சின்ன வெங்காயம்
*பூண்டு
*தோசை மாவு
*நல்லெண்ணெய்

செய்முறை…

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அவை சூடானதும் 1/4 ஸ்பூன் மிளகு, 1/2 ஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.

பிறகு அதில் 5 அல்லது 6 உரித்த சின்ன வெங்காயம், 4 பல் பூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து ஒரு கைப்பிடி அளவு முடக்கத்தான் கீரை சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும்.

ஆறிய பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து தோசை மாவில் கலந்து கொள்ளவும்.

முடக்கத்தான் கீரை தோசை செய்வது எப்படி..?

அடுப்பில் ஒரு தோசைக் கல் வைத்து அவை சூடானதும் அதில் முடுக்கத்தான் கீரை மாவை ஊற்றி தோசை வார்த்துக் கொள்ளவும்.

தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் அல்லது நெய் சேர்த்து வேகவிட்டு எடுக்கலாம்.

இந்த முடக்கத்தான் கீரை தோசை மூட்டு வலி, முழங்கால் வலியை முற்றிலும் குணப்படுத்தக் கூடியது.

Previous articleஉடல் எடையை சட்டுனு குறைய வைக்கும்.. சிம்பிள் பானம்!
Next articleவீட்டின் குபேர மூலையில் இந்த முடிச்சியை வைத்தால் தம்பதிகள் சண்டை முடிவுக்கு வரும்!