வெறும் 2 நிமிடத்தில் குறட்டை பாதிப்பை ஒழித்து விடலாம்.. இந்த முறையை கடைபிடித்து பாருங்கள்!!

Photo of author

By Divya

வெறும் 2 நிமிடத்தில் குறட்டை பாதிப்பை ஒழித்து விடலாம்.. இந்த முறையை கடைபிடித்து பாருங்கள்!!

நம்மில் பலர் குறட்டை பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம்.படுத்த அடுத்த நிமிடமே குறட்டை சத்தம் ஒலிக்க தொடங்கி விடும்.இதனால் குறட்டை விடுபவர்களை விட அருகில் தூங்குபவர்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.நம் வீட்டில் ஒருவராவது குறட்டை விட்டு தூங்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள்.அவர்கள் நன்றாகத்தான் உறங்குகிறார்கள்.அவர்கள் பக்கத்தில் படுத்து உறங்கும் நாம் தான் தூங்க முடியாமல் தூக்கத்தை தொலைத்து வருகிறோம்.

உடல் பருமன் மட்டுமே குறட்டை ஏற்பட முக்கிய காரணம் இல்லை.மூக்கடைப்பு,சைனஸ் பிரச்னை,தொண்டைப் பிரச்னைகள்,தைராய்டு,மது அருந்துவது,புகை பிடிப்பது உள்ளிட்டவைகளும் குறட்டை ஏற்பட காரணமாக இருக்கிறது.இந்த குறட்டை அசதி காரணமாகவும் ஏற்படும்.குறட்டை அனைவருக்கும் ஏற்படும் சாதாரண பாதிப்பு என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்.இந்த பிரச்சனையை விரைவில் சரி செய்ய முயலுங்கள்.

தேவையான பொருட்கள்:-

*தாக்களி – 1

*கருப்பு மிளகு – 5 முதல் 6

*தூயத் தேன் – 1 தேக்கரண்டி

*நாட்டு சர்க்கரை – 1 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு பவுலில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 1 தக்காளி பழம் போட்டு சுத்தம் செய்து கொள்ளவும்.

பின்னர் அதை 2 அல்லது 3 துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.
இதை நன்கு அரைத்து ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து ஒரு உரலில் 5 முதல் 6 மிளகு போட்டு இடித்து கொள்ளவும்.பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்டில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்கி கொண்டு இடித்து வைத்துள்ள மிளகை சேர்த்து கொள்ளவும்.

அடுத்ததாக 1 தேக்கரண்டி நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.தொடர்ந்து 1 தேக்கரண்டி துயத் தேன் கலவை சேர்த்து நன்கு கலந்து இரவு தூங்க போவதற்கு முன் பருகவும்.
இவ்வாறு செய்து தோடர்ந்து பருகி வந்தோம் என்றால் குறட்டை பாதிப்பு விரைவில் சரியாகி விடும்.