நீங்கள் கழிக்கும் சிறுநீர் நிறத்தை வைத்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ள முடியும்!

0
281
#image_title

நீங்கள் கழிக்கும் சிறுநீர் நிறத்தை வைத்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ள முடியும்!

இரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. உடலில் தேவையற்ற நச்சுக் கழிவுகள் வெளியேற வேண்டும் என்றால் சிறுநீரை முறையாக கழிக்க வேண்டும். இவ்வாறு கழிக்கும் சிறுநீரின் நிறத்தை வைத்து நம் உடல் ஆரோக்கியம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

1)வெண்மை நிறத்தில் சிறுநீர் கழித்தல்

உங்கள் சிறுநீர் மிகவும் வெண்மையாக, தெளிவாக இருந்தால் நீங்கள் அதிக அளவில் தண்ணீர் அருந்துகிறீர்கள் என்று அர்த்தம். உடலுக்கு தண்ணீர் அவசியம் என்றாலும் அதை அதிகமாக குடிப்பதினால் சிறுநீர் வழியாக அதிகப்டியான உப்பு வெளியேறி அவை உடலின் செயல்பாட்டை பாதிக்கும். தொடர்ந்து வெண்மை நிறத்தில் சிறுநீர் வெளிறினால் குமட்டல், வாந்தி, தலைவலி, மனக்குழப்பம் போன்றவை ஏற்படும்.

2)வெளிர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தல்

சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளியேறினால் உடலில் போதிய அளவுக்கு நீர் உள்ளது, நலமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

3)அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தல்

சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறினால் உடலில் போதிய அளவுக்கு நீர் இல்லை என்று அர்த்தம். இந்த நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் உடல் ஆரோக்கியம் கெட அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே தாகம் எடுக்கும்போதெல்லாம் நீர் அருந்த வேண்டும். சிறுநீரை அதிக நேரம் அடக்கிவைக்காமல் வெளியேற்ற வேண்டும்.

4)பழுப்பு நிறத்தில் சிறுநீர் கழித்தல்

சிறுநீர் பழுப்பு நிறத்தில் வெளியேறினால் உடலில் நீரிழப்பு பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். இதனால் கல்லீரல் பாதிப்பு அடைய போகிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

5)சிவப்பு நிறத்தில் சிறுநீர் கழித்தல்

சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியேறினால் சிறுநீரில் ரத்தம் இருக்க வாய்ப்பு இருக்கிறது. சிறுநீரில் கல், சிறுநீரகப் பாதைத் தொற்று, சிறுநீரகப் புற்றுநோய் போன்றவை இருந்தால் இந்த நிறத்தில் சிறுநீர் வெளியேறும். எனவே உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது நல்லது.

6)நீலம் அல்லது பச்சை நிறத்தில் சிறுநீர் கழித்தல்

சிறுநீர் நீலம் அல்லது பச்சை நிறத்தில் வெளியேறினால் தோல் அல்லது நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய போர்ஃபைரியா நோய் இருக்கிறது என்று அர்த்தம்.

7)ஆரஞ்சு நிறத்தில் சிறுநீர் கழித்தல்

சிறுநீர் ஆரஞ்சு நிறத்தில் வெளியேறினால் உடலுக்கு தேவையான தண்ணீர் அருந்துவதில்லை என்று அர்த்தம். இந்த நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் கல்லீரல் மற்றும் பித்த நாள பிரச்னைகள் இருக்கலாம்.

8)சிறுநீர் நுரைத்து வெளியேறினால்

சிறுநீர் நுரைத்து வெளியேறினால் சிறுநீரகப் பிரச்னைகள் ஏற்படும் என்று அர்த்தம். அடிக்கடி நுரைத்து சிறுநீர் வெளியேறினால் மருத்துவரை அணுகுவது நல்லது.

9)சிறுநீர் கழிக்கும் பொழுது துர்நாற்றம் ஏற்பட்டால்

சிறுநீர் கழிக்கும் பொழுது துர்நாற்றம் ஏற்பட்டால் சிறுநீரகங்கள் சில நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.