ஊரடங்கை மீறி ஊர்சுற்றி டிக்டாக் செய்யும் இளைஞர்கள் தங்களுக்கே உரிய பாணியில் எச்சரித்த காவல் துறையினர்

Photo of author

By Parthipan K

ஊரடங்கை மீறி ஊர்சுற்றி டிக்டாக் செய்யும் இளைஞர்கள் தங்களுக்கே உரிய பாணியில் எச்சரித்த காவல் துறையினர்

கொரோனோ தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்துள்ளார்.
பல்வேறு அரசியல் கட்சி பிரபலங்களும் மருத்துவர்களும் ஊடகங்களும் மக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆனால் இதனை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பலரும் தங்களது வாகனங்களில் ஊர் சுற்றி வருகின்றனர் என்பது வேதனைக்குறிய செயலாக உள்ளது. இவ்வாறாக ஒரு கும்பல் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் ஆரணி கூட்டுசாலையில் இருந்து தங்களது போனில் வீடியோவில் எடுத்த படி உலாவி வந்துள்ளனர்

இதனை பார்த்து மிகுந்த கொபம் கொண்ட‌ காவல் துறையினர் அவர்களை அழைத்து விசாரித்த போது செய்யாறில் யாருமே வெளியே வரவில்லை என்று அனைவருக்கும் தெரிவிக்க டிக்டாக் செய்ததாக திமிராக பதிலளித்துள்ளனர்.

இதனால் மிகவும் கோபம் கொண்ட காவல்துறையினர் தங்களுக்கே உரிய பாணியில் கவனித்து அனுப்பி உள்ளனர். இதனையடுத்து செய்யாறு முழுவதும் நாள் முழுக்க ஒரு இரு சக்கர வாகனம் கூட நுழையவில்லை என்கிறார்கள் காவல் துறையினர்.

மக்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சரும், முதலமைச்சரும், பிரதமரும் தினம் தினம் அறிவுறுத்தியும் படித்த இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அவர்களுக்கு மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த தேசத்தையும் பாதிக்கும் என உணராமல் இருப்பது ஏன் என்பது தெரியவில்லை என்று காவல் துறையினர் தங்களது வருத்தத்தை தெரிவித்தனர்.

இதுவரை தமிழக்த்தில் விதிமுறைகளை மீறி வெளியே சுற்றியதற்காக 13 பேர்மீது வழக்கும் 7 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.