நன்றாக நிம்மதியான தூக்கம் வர வேண்டுமா? இதோ இரண்டு வழிமுறைகள் உங்களுக்காக!

நன்றாக நிம்மதியான தூக்கம் வர வேண்டுமா? இதோ இரண்டு வழிமுறைகள் உங்களுக்காக!

இன்றைய தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில் அனைவருக்கும் தூக்கம் என்பது மறதியான விஷயம் ஆகிப் போனது. நாம் அனைவரும் எதாவது ஒரு திரையின் முன்னர் தினமும் இரவு அமர்ந்திருப்போம். இதனால் நாம் அனைவரும் நேரத்திற்கு தூங்குவதற்கு மறந்து விடுகின்றோம்.

தூக்கமின்மை பிரச்சனைக்கு நமக்கு நாமேதான் முக்கிய காரணம். இதனை சரி செய்ய அதாவது இரவில் நன்றாக தூங்குவதற்கு என்றே ஒரு சிலர் தூக்க மாத்திரையை சாப்பிடுவதை பழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களுக்கும் இரவும் தூக்கம் வரவில்லை என்று புலம்பும் மக்களுக்கும் இந்த பதிவு. இந்த பதிவில் இரவில் தூக்கம் வருவதற்கு உதவும் இரண்டு பொன்னான வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

வழிமுறை 1…

முதலில் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு கடாய் ஒன்றை வைத்து அதில் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தை தோல் உறித்து அந்த கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்றாக வதக்கி சூடு ஆறிய பின்னர் இரவு 9 மணிக்கு அப்படியே சாப்பிடலாம். இதனால் நன்கு தூக்கம் வரும்.

வழிமுறை 2…

வெங்காயம் மற்றும் நெய் பிடிக்காது என்பவர்கள் அதற்கு பதிலாக சுகத்தை பயன்படுத்தலாம். அதாவது சீரகத்தை வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வறுத்த இந்த சீரகத்தை பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் இதை வாழைப்பழத்தோட சேர்த்து சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிட்டு வந்தால் உடனடியாக தூக்கம் வரும்.