கோடை மழை: இன்னும் சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
204
#image_title

கோடை மழை: இன்னும் சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் கடந்த ஜனவரி மதத்திற்கு பிறகு பெரிய அளவில் மழை பெய்ய வில்லை.கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே பெரும்பாலான ஆறு,ஏரிகள் தண்ணீர் இன்றி வற்றி விட்டது.இதனால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளதால் பொது மக்கள் பீதி அடைந்து இருக்கின்றனர்.

போதிய மழை இல்லாததால் பயிர்கள் கருகி வருகிறது.இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.சுட்டெரிக்கும் வெயிலால் முதியவர்கள் பகல் நேரத்தில் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது.

இதனால் அனைவரும் கோடை கால மழையை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது.

இந்த நிலையில் மழைக்கு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தென்னிந்திய பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு காற்றின் திசை மாறுபட்டால் நெல்லை,தூத்துக்குடி,கன்னியாகுமரி,இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.