1 ஸ்பூன் நலுங்கு மாவு இருந்தால் எப்பேர்ப்பட்ட உடல் துர்நாற்றத்தையும் விரட்டி அடிக்க முடியும்!

0
256
#image_title

1 ஸ்பூன் நலுங்கு மாவு இருந்தால் எப்பேர்ப்பட்ட உடல் துர்நாற்றத்தையும் விரட்டி அடிக்க முடியும்!

ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம், உடலில் ஏற்படும் அதிகப்படியான வியர்வையால் உடம்பில் அதிகப்படியான துர்நாற்றம் வீசுகிறது. இந்த துர்நாற்றத்தை கட்டுப்படுத்த நாமும் வாசனை திரவியம் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் வாசனை திரவியங்களால் உடலுக்கு தீங்கு தான் ஏற்படுமே தவிர நிரந்தர தீர்வு கிடைக்காது.

எனவே 16 வகையான பொருட்களை உள்ளடக்கிய நலுங்கு மாவு தயாரித்து உடலுக்கு பயன்படுத்தி வந்தால் உடலில் இருந்து வெளியேறும் கெட்டை வாடை நீங்கும்.

தேவைப்படும் பொருட்கள்…

கடலைப் பருப்பு

பாசிப் பருப்பு

வசம்பு

ரோஜா மொக்கு

சீயக்காய்

அரப்புத் தூள்

வெட்டி வேர்

விலாமிச்சை வேர்

நன்னாரி வேர்

கோரைக் கிழங்கு

பூலாங்கிழங்கு

கஸ்தூரி மஞ்சள்

மஞ்சள்

ஆவாரம்பூ

வெந்தயம்

பூந்திக்கொட்டை

செய்முறை…

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சம அளவு எடுத்து வெயிலில் நன்கு காய வைத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இந்த பொடியை காற்று புகாத டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் அளவு நலுங்கு மாவு மற்றும் காய்ச்சாத பால் தேவையான அளவு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். பின்னர் இதை உடம்பில் துர்நாற்றம் வீசும் பகுதிகளில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து குளிக்கவும். இவ்வாறு வாரத்தில் 2 முறை என்று தொடர்ந்து உபயோகித்து வந்தால் உடலில் வீசும் துர்நாற்றம் அகலும்.