புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்தும் நாயுருவி.. எவ்வாறு பயன்படுத்துவது!!

0
226
#image_title

புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்தும் நாயுருவி.. எவ்வாறு பயன்படுத்துவது!!

குறிப்பு 01:-

நாயுருவி வேரை சுத்தம் செய்து அரைத்து கசாயம் செய்து சாப்பிட்டு வர வயிற்றுவலி, புளித்த ஏப்பம் உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும்.

குறிப்பு 02:-

நாயுருவி இலை மற்றும் காராமணிப் பயிர் சம அளவு எடுத்து அரைத்து நீர்க்கட்டு இருக்கும் நபர்களின் தொப்புள் மீது பற்றுப் போட்டால் நீர் கட்டு குணமாகும்.

குறிப்பு 03:-

நாயுருவி இலை சிறிதளவு அரைத்து சாறு எடுத்து காதில் விட்டால் சீழ் வடிதல் குணமாகும்.

குறிப்பு 04:-

சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருப்பவர்கள் இதன் இலையை சிறிதளவு அரைத்து சாறு எடுத்து நீரில் விட்டு காய்ச்சி அருந்தி வரலாம்.

குறிப்பு 05:-

இரத்த மூலம் குணமாக நாயுருவி இலையை அரைத்து எருமைத் தயிரில் கலந்து சாப்பிட்டு வரலாம்.

குறிப்பு 06:-

உடலில் உள்ள புண்கள் விரைவில் ஆற தேவையான அளவு நாயுருவி இலையை அரைத்து புண்கள் இருக்கும் இடத்தில் பூசி வரலாம்.

குறிப்பு 07:-

தீராத சளி தொல்லையை குணமாக்க நாயுருவி இலையை பருப்புடன் சமைத்து சாப்பிட்டு வரலாம்.

குறிப்பு 08:-

நாயுருவி இலையுடன் சிறிது பூண்டு சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர விட்டு விட்டு வரும் காய்ச்சல் குணமாகும்.

குறிப்பு 09:-

நாயுருவி இலையை அரைத்து மஞ்சள் கலந்து மூலத்தில் வைத்துக் கட்டி வர விரைவில் குணமாகும்.

குறிப்பு 10:-

நாயுருவி இலையை அரைத்து பாம்பு, வெறி நாய் கடித்த இடங்களில் பூசினால் அதன் விஷம் முறியும்.