10 வேப்பிலை போதும்.. கொசுக்கள் கொத்து கொத்தாக மடிந்து விடும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

0
36
#image_title

10 வேப்பிலை போதும்.. கொசுக்கள் கொத்து கொத்தாக மடிந்து விடும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

மழையால் தேங்கி இருக்கும் தண்ணீரால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி மனிதர்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.’ஏடிஸ் ஏஜிப்டி’ கொசு வகைகள் மலேரியா,டெங்கு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நோய்களை பரப்பும் தன்மை கொண்டவை.கொசுக்கள் உருவத்தில் சிறியவை என்றாலும் இதனால் ஏற்படும் பாதிப்பு மனித குலத்திற்கு எப்பொழுதும் ஆபத்து தான்.

இந்த கொசுக்களை 10 வேப்பிலை வைத்து உடனடியாக விரட்டி விடலாம்.நம் ரத்தத்தை உறிஞ்சி வந்த கொசுக்கள் ஆளை விடுடா சாமி என்று தெறித்து ஓட செய்வதற்கான எளிய ரெமிடி இதோ.

தேவையான பொருட்கள்:-

*மண் அகல் விளக்கு – 1

*வேப்பிலை – 10

*பூண்டு – 1 பல்

*சாம்பிராணி – 1

செய்முறை:-

முதலில் ஒரு மண் அகல் விளக்கு எடுத்துக் கொள்ளவும்.அதில் பூஜைக்கு உபயோகிக்கும் சாம்பிராணி 1 போட்டுக் கொள்ளவும்.பின்னர் அதை பற்றவைக்கவும்.

இந்த சாம்பிராணி நன்கு புகைந்து வந்ததும் அதில் 10 வேப்பிலை சேர்த்து கொள்ளவும்.பின்னர் அதில் 1 பல் இடித்த பூண்டு போட்டு நன்கு புகை மூட்டவும்.இவ்வாறு செய்தால் வீட்டில் ஒரு கொசு கூட இருக்காது.

மற்றொரு தீர்வு:-

ஒரு மண் விளக்கு எடுத்து அதில் சமையலுக்கு பயன்படும் இலவங்கம் 4 மற்றும் சாமி தரிசனத்திற்கு உபயோகிக்கும் கற்பூரம் 3 என்ற அளவில் சேர்த்து விளக்கை பற்ற வைக்கவேண்டும்.

இதற்கு முன்னதாக வீட்டின் நுழைவு கதவு மற்றும் ஜன்னல்கள் அனைத்தையும் மூடி விடவேண்டும்.இலவங்கம் மற்றும் கற்பூரத்தில் இருந்து வரும் வாசனை கொசுக்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

இதனால் விளக்கில் இருந்து வரும் வாசனையை தாங்க முடியாமல் வீட்டில் பதுங்கி நம் ரத்தத்தை உறிஞ்சி வந்த கொசுக்கள் மடிந்து போகும்.இந்த ரெமிடியை தினமும் செய்து வந்தோம் என்றால் நம் வீட்டை சுற்றி பதுங்கி இருக்கும் கொசுக்களுக்கு குட் பாய் சொல்லி விடலாம்.அதேபோல் புதினா,துளசி,பிரிஞ்சி உள்ளிட்ட வாசனை செடிகளை வீட்டில் வளர்ப்பதன் மூலமும் கொசுக்களை விரட்ட முடியும்.