தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு பிரியாணி!! புதிய முயற்சியால் குவியும் பாராட்டு!!

0
186

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடியே இருந்தது. இதன் காரணமாக பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, கேரள மாநிலத்தில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆகியன வெளியானது. இந்த நிலையில் அந்தத் தேர்வில் 99.47 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.

ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக கல்வியாண்டு முறையாக செயல்படாத காரணத்தால் தேர்வுகள் மிக எளிமையாகக் நடத்தப்பட்டதால் தேர்ச்சி சதவீதம் அதிகமாக கூறப்பட்டது. அதே நேரத்தில் எளிமையாக கேள்விகள் கேட்கப்பட்டும் தேர்வில் 2896 மாணவர்கள் தோல்வியை தழுவினர். இதன் காரணமாக மாணவர்கள் மிகவும் மனமுடைந்து இருந்தனர்.

இந்த நிலையில், தேர்வில் வெற்றி பெற்றதை மாணவர்கள் கொண்டாடி வந்தனர். ஆனால் தோல்வி அடைந்தவர்களின் மனநிலையை சரிபடுத்துவதற்காக ஒரு தொழிலதிபர் தன்னுடைய தங்கும் விடுதியில் இடம் கொடுத்ததோடு, பிரியாணியும் தோல்வியடைந்த மாணவர்களுக்கு இலவசமாக அளித்தார்.

இதனை குறித்து அவர் கூறியபோது, தோல்வியடைந்தவர்கள் மனநிலையை நான் யோசித்துப் பார்த்தேன் என்று அவர் கூறினார். மேலும், தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் பலர் எனக்கு போன் செய்தனர். அதில் பெரும்பாலானோர் சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கி வருகின்றனர்.

அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் அடுத்த தேர்வில் தேர்ச்சி பெறும் வரை எனது தங்கும் விடுதியில் அவர்கள் தங்க இடமும் மேலும், அவர்களுக்கு இலவச பிரியாணியும் அளிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார். இதன்மூலமாக தேர்வில் தோல்வி அடைந்தவர்களின் மனநிலை சற்று மாறி இருக்கும் என்று என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தோல்வியடைந்த மாணவர்களுக்கு தங்கும் விடுதியும், இலவச பிரியாணியும் ஏற்படுத்திக் கொடுத்த தொழிலதிபரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அவரது முயற்சியின் காரணமாக தோல்வி அடைந்த மாணவர்கள் மனமுடைந்து எந்த ஒரு தவறான முடிவும் எடுக்க மாட்டார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம் ஆகும். இதனை ஒரு எடுத்துக்காட்டாக கொண்டு, பலரும் இனி இவ்வாறு செய்து மாணவர்களை ஊக்கப் படுத்துகிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleஜூலை மாதம் 31 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு!
Next articleதமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் கனமழை! சென்னை மக்களே உஷார்!