மீண்டும் வெடித்தது தி.மு.க-பா.ஜ.க இடையே மோதல்!.ஆவேசத்தில் விரட்டி அடித்த போலீசார்கள்?
கோவையில் அவிநாசி சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்துக்காக நூற்றுக்கும் மேற்பட்ட தூண்கள் கட்டப்பட்டுள்ளன.இங்கு பல வாகனங்கள் வந்து சென்றும் இருக்கும்.மேலும் இந்தத் தூண்களில் ஏராளமான கட்சியினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.அது மட்டுமல்லாமல் ஓவியங்கள் வரைந்தும் வருகின்றனர்.
இதனையடுத்து கோவையில் மேம்பாலங்களின் தூண்களில் எவரும் போஸ்டர் ஒட்டக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பத்து நாட்களுக்கு மேலாகியும் போஸ்டர்கள் அகற்றப்படாததைக் கண்டித்து கோவை மாவட்ட பா.ஜ.கவினர் நேற்றிரவு 10 மணி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடு வந்தனர்.
இதனை அறிந்த கோவை மாவட்ட காவல் துறையினர் அவர்களிடம் வெகு நேரமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.பாலத்தின் தூண்களில் ஒட்டப்பட்டிருந்த தி.மு.க. போஸ்டர்களை கிழித்தெறிந்தும் அரசைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.இதனால் அதிர்ச்சியடைந்த திமுகவினர் அங்கு திரண்டு வந்தனர்.
தி.மு.க.வினர் மற்றும் பா.ஜ.க.வினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனால் போலீசாருக்கும் இரு கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போஸ்டர்களை கிழித்த பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரவு நேரம் என்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.இந்நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.