கொரோனாவால் இந்தியாவில் 12.50 கோடி பேர் வேலையிழப்பு!

0
93

கொரோனாவால் இந்தியாவில் 12.50 கோடி பேர் வேலையிழப்பு!

கொரோனாவால் முடங்கியுள்ள இந்திய பெரும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. அதனை சரி செய்யும் பொருட்டு இந்திய அரசு 20 லட்சம் கோடி நிதி உதவியை அறிவித்துள்ள நிலையில், இந்திய வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில்,கடந்த ஏப்ரலில், 12.20 கோடி பேர் வேலையிழந்துள்ளதாக, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையமான, CMIE அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “கொரோனா பரவலைத் தடுக்க மார்ச், 25ல் பிறப்பித்த ஊரடங்கு நடவடிக்கையால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள், பொழுதுபோக்கு மையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால், 12.20 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். அவர்களில், கடைகள், உணவகங்களில் பணியாற்றுவோர், சிறு வணிகர்கள், கூலி வேலை செய்வோரின் எண்ணிக்கை, பெருமளவு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மே 3ம் தேதி நிலவரப்படி, நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் வரலாறு காணாத வகையில் 27.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2017 ஜூலை – 2018 ஜூன் மாதத்தில் 6.1 சதவீதமாக இருந்தது.

இது 45 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும். வேலையிலுள்ளவர் மற்றும் வேலையில்லாதோரை உள்ளடக்கிய தொழிலாளர் பங்களிப்பு விகிதம், ஏப்ரல் 21 நிலவரப்படி 35.4 சதவீதமாக இருந்தது. வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்ததால், மே, 3ல் 36.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்பு, 39.60 கோடியாக குறைந்துள்ளது. இது, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத சரிவாகும்.

இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் வேலைவாய்ப்பு, மேலும் 11.40 கோடி குறைந்து, 28.20 கோடியாக சரிவடைந்துள்ளது: என கூறப்பட்டுள்ளது.