வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்!!

0
99
#image_title

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்!!

கற்றாழை ஜூஸ் உடலிலுள்ள பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது. தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் இந்த மருத்துவ குணம் கொண்ட கற்றாழை ஜூஸை குடித்து வந்தோம் எனறால் உடலில் இருக்கின்ற தேவையற்ற நச்சு கழிவுகள் மலம் வழியாக வெளியேறி உடல் வலுவாகும்.

கற்றாழை ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்:-

*குடல் இயக்கத்தை மேம்படுத்த இந்த கற்றாழை ஜூஸ் பெரிதும் உதவுகிறது.

*இந்த ஜூஸ் குடலில் நீர்ச்சத்தை அதிகரிப்பதால் மலச்சிக்கல் பாதிப்பை தடுக்கிறது.

*கற்றாழையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

*கற்றாழை ஜூஸ் தொடர்ந்து பருகுவதால் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை எந்த ஒரு சிரமும் இல்லாமல் குறைக்க உதவுகிறது.

*மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி, உதிரப் போக்கு உள்ளிட்டவைகளை சரி செய்ய கற்றாழை ஜூஸ் பெரிதும் உதவுகிறது.

*உடல் உஷ்ணம் இருப்பவர்களுக்கு கற்றாழை ஜூஸ் சிறந்த தீர்வாக இருக்கும்.

*வயிற்று கோளாறு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை சரி செய்யும் தன்மை இந்த கற்றாழை ஜூஸில் உள்ளது.

கற்றாழை ஜூஸ் தயார் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

*கற்றாழை – 5 துண்டுகள்

*இஞ்சி – சிறு துண்டு

*எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி

*தேன் – சிறிதளவு

செய்முறை:-

முதலில் கற்றாழை மடலை தோல் நீக்கி அதில் உள்ள ஜெல்லை ஒரு பவுல் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு 3 முதல் 4 முறை அவற்றை நன்கு அலசி எடுத்து கொள்ள வேண்டும்.

மிக்ஸி ஜாரில் கற்றாழை ஜெல், சிறு துண்டு இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.

இவற்றை ஒரு டம்ளரில் வடிகட்டி தேவைப்பட்டால் தேன் சேர்த்து பருகலாம். சர்க்கரை நோயாளிகள் தேனை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு தொடர்ந்து பருகுவதன் மூலம் உடலில் உள்ள அனைத்து பாதிப்புகளும் சரியாகும்.

Previous articleவீட்டில் நிம்மதி இல்லை என்று வருந்துபவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்!!
Next articleவீட்டில் உள்ள எலிகளை சாகடிக்காமல் நிமிடத்தில் வெளியேற்ற வேண்டுமா? அப்போ இதை ஒருமுறை ட்ரை பண்ணுங்க!!