தினமும் ராகி பால் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்!!
நம் பாரம்பரிய சிறு தானிய வகைகளில் ஒன்றாக ராகியில் கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் அடங்கி இருக்கிறது. இந்த ராகியில் செய்யப்பட்ட உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தோம் என்றால் உடலுக்கு தேவையான நோய் எதிப்பு சக்தி கிடைத்து விடும்.
ராகியில் களி, அடை, லட்டு, புட்டு, கூழ், தோசை, இட்லி, சப்பாத்தி, பூரி, சேமியா உள்ளிட்ட உணவுகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராகியை அரைத்து பால் எடுத்து காய்ச்சி சாப்பிட்டால் உடலில் உள்ள பல வித பாதிப்புகள் சரியாகும்.இவை எலும்புகளை வலுவாக்குவதோடு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவுகிறது.
ராகி பால் செய்யும் முறை:-
தேவையான பொருட்கள்:-
*ராகி – 100 கிராம்
*நாட்டு சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:-
முந்தின நாள் காலையில் 100 கிராம் ராகி எடுத்து அவற்றை 3 முதல் 4 முறை கழுவி 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு அன்றிரவு இரவு ஒரு காட்டன் துணி கொண்டு அவற்றை முளை கட்ட வேண்டும்.
பின்னர் அடுத்த நாள் காலையில் முளைகட்டிய ராகியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
அதற்கு முன்னதாக அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள ராகி பாலை ஒரு பாத்திரத்திற்கு வடிகட்டி அவற்றில் கொதிக்க வைத்துள்ள நாட்டு சர்க்கரை தண்ணீரை சேர்த்து நன்கு கலக்கி அருந்த வேண்டும்.
தினமும் ராகிப்பால் அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்:-
*இந்த சிறு தானியத்தில் அரிசியை விட 8 மடங்கு இரும்பு சத்து இருக்கிறது. இந்த ராகியில் பால் செய்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும்.
*மலச்சிக்கல் பாதிப்பு இருப்பவர்கள் தினமும் ராகி பால் அருந்துவதை வழக்கமாக்கி கொன்டால் அந்த பாதிப்பு விரைவில் சரியாகி விடும்.
*எலும்பு வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு இந்த ராகி பாலில் உள்ள கால்சியம் சத்து பெரிதளவில் உதவுகிறது.
*இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க ராகி பால் பெரிதும் உதவுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் தினமும் ராகி பாலை அருந்துவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
*அதிக உடல் எடை இருப்பவர்கள் ராகி பாலை அருந்துவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து வெளியேறி விடும். காரணம் ராகியில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.
*கர்ப்பம் தரித்த பெண்கள் ராகியில் களி, பால் செய்து சாப்பிட்டு வருவதன் மூலம் அவர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
*இதயம் தொடர்பான அனைத்து பாதிப்புகளையும் சரி செய்ய ராகி பால் பெரிதும் உதவுகிறது.
அதேபோல் புற்றுநோயை எதிர்க்கும் திறனை உடலுக்கு இந்த ராகி பால் அதிகளவில் வழங்குகிறது.