மருதாணி வைப்பதினால் உடலுக்கு ஏற்படும் 8 நன்மைகள்!! தெரிந்து கொள்வது அவசியம்!!

0
167
#image_title

மருதாணி வைப்பதினால் உடலுக்கு ஏற்படும் 8 நன்மைகள்!! தெரிந்து கொள்வது அவசியம்!!

நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்க இறைவன் படைப்பில் உருவான அற்புத செடி தான் மருதாணி.பெண்களுக்கு தனி அழகை அள்ளி கொடுப்பதில் மருதாணிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.மருதாணி இலைகளை அரைத்து பூசினால் சுமாரான கை,கால்களும் அழகாக காட்சியளிக்கும்.விசேஷ நாட்களில் கை மற்றும் கால்களில் மருதாணியில் வித விதமான டிசைன்கள் போட்டு கொண்டு ரசித்த காலமும் உண்டு.

ஆனால் இன்றைய காலத்தில் மருதாணிக்கு பதில் கோண் வைக்கும் பழக்கம் அதிகமாகி விட்டது.மனிதன் சோம்பேறி ஆகிவிட்டான் என்று இதில் இருந்தும் உணர்ந்து கொள்ள முடிகிறது.மருதாணி வைப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்திருந்தும் அதை யார் பறித்து அரைத்து வைக்கிறது.10 ரூபாய் செலவு செய்தால் போதும் மருதாணி கோண் வாங்கி உடனடியாக போட்டு விடலாம் என்று நினைக்கும் நம்மில் பலருக்கு தெரியவில்லை அதன் பக்க விளைவுகள்.என்றும் இயற்கை தான் பெஸ்ட் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வது மிகவும் அவசியம்.

மருதாணி வைப்பதினால் உடலுக்கு ஏற்படும் 8 நன்மைகள்:-

*அடிக்கடி மருதாணி பூசுவதால் கை,கால்களில் நகச்சுத்தி வராமல் இருக்கும்.இந்த மருதாணி குளிர்ச்சி தன்மை கொண்டவை என்பதினால் உடல் சூட்டை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

*கை மற்றும் கால்களில் உள்ள நுண் கிருமிகளை அடிக்கடி மருதாணி வைப்பதன் மூலம் அழிக்க்க முடியும்.

*மருதாணி மன நிம்மதியை கொடுக்கும் தன்மை கொண்டது.மருதாணி இலைகள் இளநரை பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கிறது.

*மருதாணி இலையுடன் கொஞ்சம் வசம்பு,மஞ்சள் தூள் மற்றும் சிறிது கற்பூரம் சேர்த்து அரைத்து உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருக்கும் இடத்தில் தொடர்ந்து கட்டி வர அவை விரைவில் குணமாகும்.

*கரு‌ந்தேம‌ல் பிரச்சனை இருப்பவர்கள் மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது ‌குளிக்கும் சோப்பை சே‌ர்‌த்து அரை‌த்து தேமல் இருக்கும் இடத்தில் பூசினால் அவை விரைவில் குணமாகும்.

*பெண்கள் மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு ஏற்படமால் இருக்க மருதாணி வைப்பது நல்லது.அதேபோல் வெள்ளைப்படுதலுக்கு உரிய தீர்வாக இருக்கும்.காயம் ஏற்பட்ட இடத்தில் மருதாணி இலையை அரைத்து பூசினால் அவை விரைவில் ஆறிவிடும்.

*ஒரு சிலருக்கு மருதாணி வைப்பதினால் உடனடியாக சளி பிடிக்கும்.அவர்கள் மருதாணி இலையுடன் 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து கை,கால்களில் பூசினால் சளி பிரச்சனை ஏற்படாது.

*அம்மைப் புண் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம்.அதேபோல் அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம்.உடலில் அதிகளவில் பித்தம் இருப்பவர்கள் இந்த மருதாணியை பூசி கொள்வதால் நல்ல தீர்வு கிடைக்கும்.