பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாதவரா நீங்கள்? இன்று முதல் இது விநியோகம் உடனே சென்று பெற்றுக்கொள்ளுங்கள்!
கொரோனா தொற்றால் ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகளில் பொது தேர்வு நடைபெறாமல் ஒத்தி வைத்திருந்தனர். தற்பொழுது சிறார்களுக்கே தடுப்பூசி வந்த நிலையில் இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்றது. இந்த வருடமும் பொது தேர்வு நடைபெறாது என்று பேச்சுக்கள் இருந்த வண்ணமாக தான் காணப்பட்டது. ஆனால் பொது தேர்வு கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி முதல் தொடங்கியது. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் மே இறுதிக்குள் முடிவடைந்து விட்டது.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் எட்டு லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த மாதம் வெளிவந்தது. காலை 10 மணிக்கு 12 ஆம் வகுப்பு முடிவுகளும் மதியம் 12 மணிக்கு பத்தாம் வகுப்பு முடிவுகளும் வெளியானது. இதில் 12 ஆம் வகுப்பில் மட்டும் 93 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் துணை தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்தனர்.
அவர் துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் விநியோகித்து வருகின்றனர். துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் இந்த ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையத்தின் வாயிலாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வானது வரும் 25ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த துணைத் தேர்வுகள் அனைத்தும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி வரை நடைபெறும் என்று கூறியுள்ளனர். செய்முறை தேர்வு எழுத உள்ளவர்கள் அவர்களுக்கு குறிப்பிட்டுள்ள மையத்தின் கண்காணிப்பாளரை சந்தித்த மேற்கொண்ட தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளனர்.