இன்ஜினியரிங் படிக்கப் போறீங்களா? அப்படின்னா இது உங்களுக்கான செய்திதான் உடனே இதை செய்யுங்கள்!

0
109

கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி முதல் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு இணையதளம் மூலமாக தொடங்கியது. இந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி வரையில் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், சிபிஎஸ்சி நினைவுகள் வெளியானதில் உண்டான தாமதம் காரணமாக, பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பம் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த 22 ஆம் தேதி சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன அதனை தொடர்ந்து நேற்று பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு முடிவடைந்தது.

சென்ற வருடம் பொறியியல் படிப்பிற்கு 1,74,071 மாணவர்கள் விண்ணப்பம் செய்து இருந்தார்கள் நடப்பு வருடத்தில் 2,11,115 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள்.

அதேபோல சென்ற வருடம் 1,38,053 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருந்தார்கள். நடப்பாண்டில் அந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதாவது 1,56,214 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருக்கிறார்கள்.

அதேநேரம் 1,67,387 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க கட்டணங்களை செலுத்தி இருக்கிறார்கள். இந்த மாணவர்கள் எதிர்வரும் 29ஆம் தேதிக்குள் அதாவது நாளைக்குள் தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றும் செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில்1,35,554 பொறியியல் இடங்கள் இருக்கின்றன, வருடம் 80,524 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்தனர். இந்த வருடம் விண்ணப்பங்கள் அதிகரித்து சான்றிதழ் பதிவேற்றம் செய்திருக்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை சென்ற வருடத்தை விடவும் அதிகரித்திருப்பதால் இந்த வருடத்தில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடி, கணினி அறிவியல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், உள்ளிட்ட படிப்புகளுக்கு சென்ற வருடத்தை போல இந்த வருடத்திலும் மாணவர்கள் இடையே நல்ல வரவேற்பு இருக்கும் என்று கல்வியாளர்கள் கருதி வருகிறார்கள். அதே சமயம் நோய் தொற்று காலகட்டத்திற்கு பிறகு ஆட்டோமொபைல் ஐடி உள்ளிட்ட துறையில் தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்பி இருப்பதால் வேலைவாய்ப்பும் கணிசமாக மாணவர்களுக்கு அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே சென்ற சில வருடங்களாக பொறியியல் படிப்பில் ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே மாணவர்கள் சேர்ந்து வந்த நிலையில், இந்த வருடம் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

Previous articleஒரு கிளிக்கில் உள்ளங்கையில் உலகம்! கனரா வங்கி செயல்படுத்தும் சூப்பர் சேவை!
Next articleமழையால் சதத்தை தவறவிட்ட சுப்மன் கில்… வொயிட் வாஷ் செய்த இந்தியா!