கோவை மாவட்டத்தில் தனியார் பேருந்தும் சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Photo of author

By Parthipan K

கோவை மாவட்டத்தில் தனியார் பேருந்தும் சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Parthipan K

A private bus and a cargo van collide head-on in the Coimbatore district. There is a lot of excitement in the area!

கோவை மாவட்டத்தில் தனியார் பேருந்தும் சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

கோவை மாவட்டம் ஆர் எஸ் புரம் பகுதியில் இருந்து கட்டுமான பணிக்கு தேவையான கல்லை  ஏற்றுக்கொண்டு பொள்ளாச்சி நோக்கி சரக்கு ஆட்டோ ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஆட்டோவானது கிணத்துக்கடவு அருகில் கோவில்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அங்கு அந்த சரக்கு ஆட்டோவிற்கு பின்னால் அதிக வேகமாக தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.

மேலும் அந்த தனியார் பேருந்தானது நிலை தடுமாறி சரக்கு ஆட்டோவின்  மீது மோதியது அந்த பேருந்தில் மோதியதில்  சரக்கு ஆட்டோவானது  சாலை நடுவே இருந்தா தடுப்பு சுவரின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவை இயக்கி  வந்த ஓட்டுநர் மாதேஷ்க்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் அவர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார் .இந்த விபத்து காரணமாக பொள்ளாச்சி கோவை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து வடக்கிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த விபத்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.