கோலாகலமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழா! மதுராவில் குவிந்த பக்தர்கள்!

0
313

கிருஷ்ணர் பிறந்த இடமான கோவில் அமைந்திருக்கின்ற உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் ஜென்மாஷ்டமி திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆண்டுதோறும் ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதி கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த விதத்தில், இந்த வருடத்திற்கான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்றைய தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் ஜென்மாஷ்டமி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கிருஷ்ணர் ஜென்ம பூமி கோவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்து வருகிறது. நேற்றிரவு முதல் நடைபெற்று வரும் வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

சென்னையிலுள்ள இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Previous articleஎன்னைக் கேட்காமல் எதுவும் செய்யக்கூடாது! அதிரடியில் இறங்கிய ஓபிஎஸ்!
Next articleநாட்டில் மறுபடியும் அதிகரிக்கத் தொடங்கிய நோய் தொற்று பாதிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here