ஆஸ்துமா நோய் எதனால் ஏற்படுகிறது?!..முக்கிய காரணங்கள் என்ன ?..

0
229

ஆஸ்துமா நோய் எதனால் ஏற்படுகிறது?!..முக்கிய காரணங்கள் என்ன ?..

ஆஸ்துமா என்பது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நோய் ஆகும்.சுவாசக்குழல்கள் என்பது மூச்சுக் காற்றை நுரையீரலுக்குச் எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகும்.சுவாசக குழாய்கள் சுருங்குவதால் அதன் வழியாக காற்று சென்றுவரும்போது அதிகமாக சத்தம் கேட்கிறது. மேலும் நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது. இதன் விளைவாக மிகுந்த சிரமத்துடன் மூச்சு விடும் நிலைமை இருமல் மார்பு பகுதி இருக்கமாகுதல் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவற்றை உண்டாக்குகிறது.

இவை அனைத்தும் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிகமாகக் காணப்படும்.ஆஸ்துமா நோயினால் பெரும்பாலும் மூன்று முதல் ஏழு வயது வரை உள்ள நகர்ப்புறக் குழந்தைகளே பாதிக்கப்படுகின்றனர்.ஆஸ்துமா ஏற்படும்போது மூச்சுக்குழாய்களின் உட்புறப் படலம் வீக்கம் அடையும்.இந்த ஆஸ்துமா நோய் எப்படி ஏற்படுகிறது? அதற்கான முக்கிய காரணங்கள் என்ன? வாங்க பார்க்கலாம்!..சிகரட் புகை,கயிறுகள், மரத்தூள்,செல்லப் பிராணிகளின் முடி,சுவாசிக்கும் காற்றில் இருக்கும் மாசு,அடிக்கடி மாறும் காலநிலை,மன அழுத்தம்,வாகனங்களில் இருந்து வெளிவரும் கரும்புகை, சளித்தொல்லை, தும்மல் பிரச்னை,பரம்பரை ஆகிய பல்வேறு காரணங்களினால் இந்நோய் ஏற்படுகிறது.

 

 

Previous articleஅரசியலில் இருந்து விலகும் விஜயகாந்த்:!!
Next articleமூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை! டிஃபரென்ட் ரெசிபி இதோ உங்களுக்காக!