பழைய சோற்றில் இத்தனை நன்மைகளா? இது தெரிந்தால் நீங்கள் வீண் செய்ய மாட்டீர்கள்!
நமது முன்னோர்கள் சத்து மிகுந்த களி, கேழ்வரகு போன்றவற்றை உண்டு தான் பல வருடம் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் இக்கால கட்டத்தில் அதெல்லாம் இடம் தெரியாமல் போய்விட்டது. ஆனால் அதன் அருமை தற்போது தான் சிறிதளவு தென்பட்டு ஆங்காங்கே மக்கள் அதனை பின்பற்றி வருகின்றனர். நம் அன்றாடம் வீட்டில் செய்யும் சாதம் மீதியானால் கீழே கொட்டுவதை தான் வழக்கமாக வைத்துள்ளோம். ஆனால் அதில் தான் அதிக அளவு சத்துக்கள் உள்ளது.
பழைய சோற்றில் நோய் எதிர்ப்பு காரணிகள் அதிக அளவில் உள்ளதால் அது உடலை பாதுகாக்கிறது. உடலில் இருந்து கொண்டே ஒரு கிருமி நாசினி போல் செயல்பட உதவுகிறது. இளமையாக இருக்க இந்த பழைய சோறு உதவி புரியும். காலையில் வெறும் வயிற்றில் இதை சாப்பிடுவதால் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும். உடல் சூடு உள்ளவர்கள் தினந்தோறும் இதை உட்கொள்ளலாம். அதேபோல எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த பழைய சோறு ஒரு நல்ல தீர்வு.
இந்த பழைய சோற்றில் அதிக அளவு நார் சத்துக்கள் உள்ளதால் மலச்சிக்கல் ரத்த அழுத்தம் ஆகியவை குணமடைய உதவுகிறது. இந்த பழைய சோற்றை காலையிலிருந்து மதியத்திற்குள் உண்பதே நல்லது. மாலை நேரங்களில் பழைய சோறு சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.