வடகொரியாவில் திடீரென முளைத்த புதிய கட்டிடம்: சாட்டிலைட் புகைப்படத்தால் பரபரப்பு!

0
147

வடகொரியாவில் திடீரென முளைத்த புதிய கட்டிடம்: சாட்டிலைட் புகைப்படத்தால் பரபரப்பு!

வடகொரியாவில் புதிய கட்டிடம் ஒன்று திடீரென முளைத்து இருப்பது சேட்டிலைட் புகைப்படம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடந்து சமாதான பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தாலும், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது என்பது தெரிந்ததே.

அண்மையில் ’எங்கள் கிறிஸ்துமஸ் பரிசு வாஷிங்டன் எடுக்கும் முடிவைப் பொருத்தது’ என்று வடகொரியா அமெரிக்காவை எச்சரிக்கை விடுத்ததே மீண்டும் இருநாடுகளுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று எடுத்த சாட்டிலைட் புகைப்படத்தில் வடகொரியாவின் அணு ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலை அருகே புதிய கட்டிடம் ஒன்று திடீரென தோன்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கட்டத்தில்தான் அணு ஆயுத ஏவுகணைகள் சோதனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. டிசம்பர் 19 ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்த சேட்டிலைட் புகைப்படம் அமெரிக்காவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவை வடகொரியா எச்சரிக்கை செய்ததற்கும், இந்த கட்டிடத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது நீண்ட தூர இலக்கை தாக்கும் ஏவுகணைகள் இந்த கட்டிடத்தில் இருந்துதான் ஏவ வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

Previous articleபடம் தோல்வி அடைந்தால் நஷ்ட ஈடு: தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய கட்டுப்பாடு
Next articleநண்பரை குடிக்க வைத்து விட்டு அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்?