“ஆச்சர்யமாக இருக்கிறது… அது நடக்காமல் இந்தியாவை வீழ்த்த முடியாது…” ஆஸி கேப்டன் கருத்து

0
122

“ஆச்சர்யமாக இருக்கிறது… அது நடக்காமல் இந்தியாவை வீழ்த்த முடியாது…” ஆஸி கேப்டன் கருத்து

இந்திய அணியிடம் அடைந்த தோல்விக்கு பிறகு ஆஸி அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் வாழ்வா சாவா என்ற இறுதிப் போட்டி நேற்று ஐதராபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன் படி களமிறங்கிய ஆஸி. அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேமரான் க்ரின் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆனால் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால் அந்த அணி ஒரு கட்டத்தில் தடுமாற தொடங்கியது. இதையடுத்து கடைசி கட்டத்தில் அந்த அணியின் டிம் டேவிட் மற்றும் டேனியல் சாம்ஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி ஸ்கோரை 187 ரன்களாக்கினர்.

அதன் பின்னர் ஆடிய இந்திய அணி சூர்யகுமார் யாதவ் மற்றும் கோலியின் சிறப்பான அரைசதத்தால் இலக்கை கடைசி ஓவரில் எட்டியது. இதன் மூலம் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி அதன் பின்னர் மீண்டெழுந்தது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தொடர் குறித்து பேசியுள்ள ஆஸி. கேப்டன் ஆரோன் பின்ச் “உண்மையிலேயே நல்ல தொடர். நாங்கள் எதிர்த்துப் போராடிய விதம் அற்புதம். உண்மையில் கிரீன் போன்ற இளம் வீரர் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். நாங்கள் விக்கெட்டுகளைப் பெற்றிருக்க வேண்டும், அப்படி இல்லாத போது இந்தியாவை வெல்ல முடியாது. சில சமயங்களில் நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மெதுவாக இருந்தோம், ஆனால் உலகத்தரம் வாய்ந்த அணிக்கு எதிராக இது போன்ற இறுக்கமான தொடரை விளையாடுவது வீரர்களை நல்ல நிலையில் வைத்திருக்கும். க்ரீனின் தீவிர ஆக்ரோஷமான அணுகுமுறையுடன் அவர் ஆட்டத்தை தொடங்கிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.” எனக் கூறியுள்ளார்.

Previous articleசூரியகுமார், ஹோலி ருத்ர தாண்டவம்! கோப்பையை வென்றது இந்திய அணி!
Next articleஇன்ஸ்டாகிராம் வெளியிட்ட புதிய அப்டேட்! பயனாளிகள் மகிழ்ச்சி!