பிளாஸ்டிகளுக்கு மாற்று பொருளை தயாரிக்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு ஒரு அரிய வாய்ப்பு!

0
263

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு மாற்று பொருட்கள் தயாரிப்பதில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? தங்களுடைய வணிகத்தில் குறைந்து விலையில் பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்களை அடையாளம் காண வேண்டுமா?

அப்படி என்றால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய கண்காட்சி மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கில் பங்கேற்றுக் கொள்ளுங்கள்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்கள் குறித்த தேசிய கண்காட்சியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்ய நாதன் திறந்து வைத்திருக்கிறார்.

150 அரங்குகள் கொண்ட இந்த கண்காட்சியில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் நார் அரிசி, தவிடு அரிசி, மட்டை விவசாய பொருட்கள், பாக்கு இலை பொருட்கள், தேங்காய் மட்டை பொருட்கள், தென்னை நார் பொருட்கள், மற்பாண்ட பொருட்கள், பானை பொருட்கள், துணி, சணல், பொருட்கள் உள்ளிட்டவைகளை உற்பத்தி செய்யும் தயாரிப்பாளர்கள் தங்களுடைய தயாரிப்புகளையும் இயந்திரங்களையும் காட்சிப்படுத்தி வருகிறார்கள்.

அதோடு இறுதி நாளில் தொழில் முனைவோருக்கான கருத்தரங்குகள் நடைபெறவிருக்கிறது. அதோடு தொழில் முனைவோருக்கு நிதி ஆதாரங்களை பெரும் விதத்தில் நிதி நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய கண்காட்சிக்கு அனுமதி முற்றிலும் இலவசம் என்று கூறப்பட்டுள்ளது. மாற்றுப் பொருட்களை தயாரிக்க முயற்சி செய்யும் தொழில் முனைவோர்களுக்கு ஹோட்டல், சினிமா, திருமண மண்டபம் போன்ற வணிகங்களில் ஈடுபட்டுள்ளவர்களும் இதில் பங்கேற்றுக் கொண்டு பயனடையலாம்.

முன்னதாக தமிழக அரசு ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் பயன்படுத்துவதற்கு தடை விதித்தது.

அதோடு ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் உண்டாகும் தீமைகள் மற்றும் அதனை தவிர்ப்பதன் அவசியம் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் விதத்தில் மீண்டும் மஞ்சப்பை என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டது

அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

Previous articleஆண்களே இதனை மட்டும் ஒரு பொழுதும் முகத்தில் அப்ளை செய்து விடாதீர்கள்! எந்தெந்த பொருட்கள் என நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!
Next articleதமிழகத்தில் இந்த மரத்தை உடனடியாக அகற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here