ஆர் எஸ் பாரதி: காமராஜரை பற்றி அவதூறு பேச்சு!! திமுக காங்கிரஸ் இடையே உண்டான பிளவு!!

Photo of author

By Rupa

ஆர் எஸ் பாரதி: காமராஜரை பற்றி அவதூறு பேச்சு!! திமுக காங்கிரஸ் இடையே உண்டான பிளவு!!

தவளை தன் வாயால் கெடும் என்பார்கள். அதுபோல திமுக நிர்வாகிகளும் தன் வாயாலேயே பல சிக்கல்களில் சிக்கிக் கொள்கின்றனர். திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா இந்துக்கள் குறித்து அவதூறாக பேசினார். பொதுமக்கள் மற்றும் இதர கட்சிகள் இடையே அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். அந்த சர்ச்சை முடிவதற்குள்ளேயே உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெண்களை அவதூறாக பேசினார். இவ்வாறு நாள் ஒன்றுக்கு ஒருவராவது ஏதேனும் பேசி சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். அந்த வகையில் திமுக அமைப்பு செயலாளர் ஆன ஆர் எஸ் பாரதி காமராஜரை குறித்து அவதூறாக பேசியுள்ளார். இப்பொழுது இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. கூட்டணி கட்சிக்குள்ளேயே மோதலை ஏற்படுத்தி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஆர் எஸ் பாரதி தற்போது பட்டியல் இனத்தவர்கள் நீதிபதியாக உள்ளார்கள் என்றால் அது திமுக போட்ட பிச்சை என்று பேசினார். இவ்வாறு பேசியதற்கு அவர் மீது வழக்கு தொடுத்து ஜாமினில் தற்பொழுது வெளியே உள்ளார். இவ்வாறு இருக்கும் நிலையிலும் மீண்டும் காமராஜரை பற்றி அவதூறாக பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காமராசர் முதலமைச்சராக இருந்த காலத்தில் திமுகவினரின் கட்டை விரலை வெட்டுவேன் என்றார். ஆனால் அவருக்கு கல்லறை கட்டியதே நாங்கள் தான். அந்தக் கல்லறை தான் நாம் தற்பொழுது கும்பிட்டு வருகிறோம். இதையெல்லாம் நான் யாரையும் புண்படுத்தும் வகையில் கூறவில்லை, வரலாற்றில் நடந்தது தான் கூறுகின்றேன் என பேசி உள்ளார்.இவ்வாறு பேசியதற்கு காங்கிரஸ் கட்சி பெரும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அந்த வகையில் தமிழக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் ஆர் எஸ் பாரதி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கூறிய வாக்குறுதியும் கூடாத வாக்குறுதியையும் நிறைவேற்றியவர் காமராசர் அவ்வாறு உள்ளவரை வைத்து அரசியல் பேசுபவர்கள் நிராகரிப்பார்.அவர் மட்டுமின்றி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூறும் திமுக அமைப்பு செயலாளரான ஆர் எஸ் பாரதி பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். காமராஜர் என்றைக்கும் நான் விரலை வெட்டுவேன் என்று பேசி ஆட்சி பிடித்தவர் இல்லை. இவ்வாறு பொய்யான பேச்சுடன் அரசியல் செய்யும் ஆர் எஸ் பாரதி அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார். இவ்வாறு ஆர் எஸ் பாரதி பேசியதால் கூட்டணி கட்சிக்குள்ளேயே சிறிது பிளவு ஏற்பட்டுள்ளது.