இலக்கிய திறனறிவு தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு! மாதம் ரூ.1,500 உதவித்தொகை!

0
111

இலக்கிய திறனறிவு தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு! மாதம் ரூ.1,500 உதவித்தொகை!

தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த துறைகளில் ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப் பெருமளவில் பங்கு பெறுகின்றனர். இது போன்று தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வகையில் 2022-2023-ம் கல்வி ஆண்டில் முதல் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவு தேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்கான தேர்வு வரும் 15-ம் தேதி நடைபெறவுள்ளது.

483 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. தேர்வை எழுதுவதற்கு 2 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இவர்களுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இத்தேர்வின் மூலம் உதவித்தொகை பெறும் மாணவர்களில் 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும் , மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K