ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! டிஜிட்டல் கரன்சி வெளியீடு!

0
220
Reserve Bank announced! Digital currency launch!
Reserve Bank announced! Digital currency launch!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! டிஜிட்டல் கரன்சி வெளியீடு!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டில் ரூபாய் நோட்டிற்கு இணையாக டிஜிட்டல் ரூபாய் ரிசர்வ் வங்கி வெளியிடும் என்று 2022-2023 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கூறியிருந்தார்.தற்போதுள்ள காலக்கட்டத்தில் பணம் பேப்பர் வடிவில் இருந்தாலும் நாணய வடிவில் இருந்தாலும் அதற்கென தனி மதிப்பு உண்டு.

பணம் தான் அனைத்தும் என்ற சூழல் இருந்து வருகின்றது.மேலும் பேப்பர் மற்றும் நாணய வடிவில் பண மதிப்பு உள்ளது போல டிஜிட்டல் கோட் மூலம் உருவாக்குவது டிஜிட்டல் நாணயங்கள் அல்லது டிஜிட்டல் கரன்சி என கூறப்படுகிறது.

இந்த டிஜிட்டல் நாணயத்தை அரசாங்கம் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் தயாரித்து வருகின்றன.மேலும் இவை காகித பணத்திற்கு சமமாக இந்த டிஜிட்டல் பணம் மதிப்பிடப்படும்.இந்த டிஜிட்டல் நாணயத்தை ஒரு சில நாடுகள் மட்டும் அங்கீகரித்துள்ள நிலையில் தற்போது இந்தியாவும் அங்கீகரிக்கவுள்ளனர்.

மேலும் இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி நாளை முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.அதனைதொடர்ந்து சோதனை முயற்சியாக மொத்த பரிவர்த்தனைகளுக்காக நாளை முதல் டிஜிட்டல் ரூபாய் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் பிறகு ஒரு மாதத்தில் சில்லறை பரிவர்த்தனைகளுக்கும் டிஜிட்டல் பணம் நடைமுறைக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Previous articleவாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட அமைச்சர்! வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்!
Next articleஇந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது கிரிப்டோ கரன்சி! 9 வங்கிகளில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு!