இந்தியா vs பங்களாதேஷ் போட்டி… ஓவர்கள் குறைப்பு… 16 ஓவர்களில் 151 ரன்கள் இலக்கு!
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக 4 ஓவர்கள் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 12 போட்டி மழையால் பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. இதனிடையே இப்போது டக்வொர்த் லூயிஸ் விதிப்படி போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு 151 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பங்களாதேஷ் அணி 9 ஓவர்களில் 85 ரன்கள் சேர்க்க வேண்டும்.
முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 6 விக்கெட்கள் இழந்து 184 ரன்கள் சேர்த்தது. இந்திய அணிய்ல் தொடர்ந்து சொதப்பி வந்த கே எல் ராகுல் இந்த போட்டியில் அரைசதம் அடித்து கலக்கினார். அதே போல விராட் கோலியும் 44 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து அசத்தினார்.
185 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய பங்களாதேஷ் அணி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அதிரடியாக போட்டியை தொடங்கியது. குறிப்பாக அந்த அணியின் லிட்டன் தாஸ் 21 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். தற்போது போட்டி மீண்டும் தொடங்கப்பட்டு பங்களாதேஷ் அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.
இதில் போட்டி தொடங்கிய இரண்டாவது பந்திலேயே அதிரடியாக விளையாடிய லிட்டன் தாஸ் ரன் அவுட் ஆகி ஆட்டமிழந்தார். இது இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது.