மைனராக இருப்பவர்கள் இப்படி உடலுறவு வைத்தால் வழக்கு இல்லை! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

0
174
There is no case if minors have sex like this! Action order of the High Court!
There is no case if minors have sex like this! Action order of the High Court!

மைனராக இருப்பவர்கள் இப்படி உடலுறவு வைத்தால் வழக்கு இல்லை! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தண்டிக்கும் விதமாக போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த போக்சோ சட்டத்தில் எந்த ஒரு வயது வரம்பும் கிடையாது. பாலியல் ரீதியாக புகார் அளிக்கும் அனைவரும் இந்த சட்டத்தின் கீழ் வருவர். இதற்கு மாறாக டெல்லியில் ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதற்கு வழங்கப்பட்ட தீர்ப்பானது போக்சோ சட்டத்தின் கீழ் வராது என்று கூறியுள்ளனர். டெல்லியில் 17 வயதுமிக்க சிறுமியை அவருடைய பெற்றோர், வயது மிகுந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஆனால் இச்சிறுமி பல ஆண்டுகளாக ஆண் நண்பர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். திருமணம் ஆன நிலையிலேயே, அவரை விட்டு தான் காதலித்த ஆண் நண்பருடன் இச்சிறுமி சென்றுவிட்டார். இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோர்காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் இச்சிறுமிக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் மூலம் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.இச்சிறுமியின் காதலன் மீது போக்சோ வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து அவரை ஜாமினில் விடுவிக்க கோரி மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவானது நீதிபதிகள் முன்னிலையில் அமர்வுக்கு வந்தது, முதலில் நீதிபதிகள் இந்த வழக்கு குறித்து சிறுமியின் வாக்குமூலத்தை கேட்டு அறிந்தனர். அதில், நான் என் விருப்பத்தோடு தான் அவருடன் சென்று திருமணம் செய்து கொண்டேன். மேலும் எங்களுக்கு காவல்துறை பாதுகாப்பும் வழங்கியது என அச்சிறுமி வாக்குமூலம் அளித்தார்.

இதனைக் கேட்ட நீதிபதி, சிறுமியின் விருப்பத்தோடு தான் திருமணம் நடைபெற்றது. யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் தான் அவருடைய ஆண் நண்பரை இச்சிறுமி திருமணம் செய்து கொண்டுள்ளார். அதேபோல தான் இவர்களுடைய பாலியல் உறவும் இருவரின் சம்மதத்துடன் நடந்துள்ளது. இச்சிறுமி மைனர் என்பதால் இது சட்டத்திற்கு எதிரானது. ஆனால் சிறுமியின் விருப்பத்தோடு நடந்திருப்பதால் இது போக்சோ சட்டத்திற்கு கீழ் வராது.

எனவே இச்சிறுமி திருமணம் செய்த நபரை பாலியல் வன்முறை எனக் கூறி சிறையில் அடைப்பது மிகப்பெரிய குற்றம். போச்சோ சட்டம் என்பது வலுக்கட்டாயமாக குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தவர்களுக்கு இயற்றப்பட்டதாகும். ஆனால் இது போக்சோவின் கீழ் வராது. மேலும் அச்சிறுமி திருமணம் செய்த நபருக்கு ஜாமீன் கொடுத்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Previous articleபள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
Next articleதமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் பேஸ்புக் பக்கம் ஹேக்!