உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! சபரிமலையில் இந்த தரிசனத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது அதனால் பக்தர்கள் மாலை அணியவில்லை.இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.கார்த்திகை மாதம் என்றாலே சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் மலை அணிந்து செல்வது வழக்கம்.கார்த்திகை மாதத்தில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும் அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது.
முதல் நாளில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி கோவிலுக்கு வந்தனர்.மேலும் விடுமுறை நாட்களில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது.இந்நிலையில் அண்மையில் சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்கேற்ப ஹெலிகாப்டர் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஒரு தனியார் நிறுவனம் அறிவித்தது.அந்த அறிவிப்பை தொடர்ந்து ஐக்கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.
அந்த விசாரணையில் தனியார் நிறுவனம் அந்த அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.மேலும் அந்த உத்தரவில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் சம அளவு முக்கியத்துவம் வழங்கவேண்டும்.அதனால் கோவிலில் வி.ஐ.பி தரிசன முறையை உடனே ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த ஆண்டு மலைபாதையும் திறந்து விடப்பட்டுள்ளது.எரிமேலி வண்டிபெரியார் மற்றும் சத்திரம் வழியாக பக்தர்கள் சாமி சன்னிதானம் செல்கிறார்கள்.நேற்று வரை இந்த வழியாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்றுள்ளனர் என வனத்துறை தெரிவித்துள்ளனர்.இந்த வழியில் பக்தர்கள் அதிகளவு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.