திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! சிறப்பு தரிசன  டிக்கெட் இன்று காலை  வெளியீடு!

0
196

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! சிறப்பு தரிசன  டிக்கெட் இன்று காலை  வெளியீடு!

திருமலை திருப்பதி கடந்த புரட்டாசி மாதம் வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவு வரத் தொடங்கினார்கள். அதனால் மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை அறிமுகம் படுத்தினார்கள். டோக்கன் மூலம் முன்பதிவு செய்யும்பொழுது பக்தர்கள் எந்த நாளில் எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மலைக்கு வரும்பொழுது கூட்ட நெரிசல் ஏற்படுவதை ஓரளவு தடுக்க முடியும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.

 

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி வைகுண்ட நுழைவாயில் திறக்கப்படும் பக்தர்கள் ஜனவரி 2ஆம் தேதி முதல் ஜனவரி 11ஆம் தேதி வரை தொடர்ந்து பத்து நாட்களும் அனுமதிக்கப்படுவார்கள்.

 

அதற்கு இன்று காலை 9 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் தேவஸ்தானம் வெளியிட்டது.வரும் பத்து நாட்களும்  நாளொன்றுக்கு 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் சுமார் இரண்டு லட்சம் டிக்கெட் வெளியிடப்பட இருக்கின்றனர். ஜனவரி இரண்டாம் தேதி வைகுண்ட ஏகாதசி வருவதை முன்னிட்டு 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கோவில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அன்றைய தினம் கோவில் முழுவதும் வாசனை திரவங்களால் சுத்தம் செய்யப்பட உள்ளன. காலை 6 மணி முதல் 10 மணி வரை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற உள்ளது.டிசம்பர் 27ஆம் தேதி காலை 11 மணிக்கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Previous articleமுதுகலை பட்டதாரிகளுக்கு அறிய வாய்ப்பு !! 1895 காலி பணியிடங்கள்!
Next articleசபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களின் கவனத்திற்கு! கேரள சுகாதாரத்துறை மந்திரி வெளியிட்ட தகவல்!