மகளிர் டி20 உலக கோப்பை போட்டி- 6வது முறையாக சாம்பியனான ஆஸ்திரேலியா!

Photo of author

By Parthipan K

மகளிர் டி20 உலக கோப்பை போட்டி- 6வது முறையாக சாம்பியனான ஆஸ்திரேலியா!

மகளிர் டி 20 உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இதன் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எடுத்தது. 

அதன்பிறகு 157 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம், ஆஸ்திரேலியா அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, 6ஆவது முறையாக டி20 உலக கோப்பையை வென்றுள்ளது.

2010, 2012, 2014ஆம் ஆண்டுகளில் ஹாட்ரிக் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி அதன்பிறகு 2018, 2020, 2023 ஆகிய ஆண்டுகளிலும் உலக கோப்பையை வென்று இரண்டு ஹாட்ரிக் சாதனையை படைத்துள்ளது. இதுவரை 8 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது.

ஐசிசி தொடர்களில், ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இதுவரை தென்னாப்பிரிக்கா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதே கிடையாது. முதல் முறையாக இந்த தொடரில், சொந்த மண்ணில் இறுதிப்போட்டிக்கு நுழைந்த தென்னாப்பிரிக்கா அணி, இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தால், அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.