அரியலூர் பேருந்து நிலையம் நாளை முதல் புறவழிச்சாலைக்கு இடமாற்றம்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
அரியலூர் நகராட்சியின் பேருந்து நிலையம் வலுவிழந்த நிலையில் உள்ளதால் அதனை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய பேருந்து நிலையம் கட்ட தமிழ்நாடு அரசு 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அனுமதி வழங்கியது இதனையடுத்து சமீபத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்களை இடித்து புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. கட்டுமான, பணிகள் முடியும் வரை தற்காலிக பேருந்து நிலையம் அரியலூர் புறவழிச்சாலையில் வாணி மஹாலின் எதிர்புறம் நாளை முதல் செயல்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து தற்காலிகமாக பேருந்து நிலையம் செயல் பட உள்ள இடத்தில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் தரை பகுதியை சமப்படுத்தும் பணி கடைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.