அடேங்கப்பா வசூல் வேட்டை நடத்திய தெகிடி ஹீரோவின் புதிய படம்!! திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

Photo of author

By Amutha

அடேங்கப்பா வசூல் வேட்டை நடத்திய தெகிடி ஹீரோவின் புதிய படம்!! திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!! 

அசோக் செல்வன் நடித்த போர்த் தொழில் படம் நல்லதொரு வசூலை நிகழ்த்தியுள்ளது.

அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்த படம் தான் போர் தொழில். சூது கவ்வும் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். அதைத்தொடர்ந்து ஓ மை கடவுளே, மற்றும் தெகிடி போன்ற வெற்றி படங்களில் நாயகனாக நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து மேலும் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல்,  வேழம், நித்தம் ஒரு வானம், எஸ்டேட் ஆகிய படங்களில் சிறப்பு நடித்துள்ளார்.

தற்போது இவர் அறிமுக இயக்குனரான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார் உடன் இணைந்து போர் தொழில் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது நல்லதொரு வரவேற்பு பெற்றுள்ளதால் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.

விக்னேஷ் ராஜா மற்றும் ஆல்ஃபிரட் பிரகாஷ் ஆகிய இருவரும் சேர்ந்து கதை வசனம் எழுதிய இந்த படத்தில் சரத்குமாரும், அசோக் செல்வமும் காவல் அதிகாரிகளாக நடித்துள்ளனர். ஹீரோயினியாக நிகிதா விமலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார். சுமார் 5.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படமானது தற்போது வரை 20 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.