தீபாவளிக்கான ரயில் முன்பதிவு துவக்கம்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
நம் நாட்டில் பல்வேறு போக்குவரத்து முறைகள் காணப்பட்டாலும், ரயில் போக்குவரத்தையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். பேருந்து போக்குவரத்தும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மக்கள் நீண்ட தூர பயணங்களுக்காக ரயில் போக்குவரத்தையே சௌகரியமாக கருதுகின்றனர்.
தினமும் ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை ஏராளமாக காணப்படுகிறது. குறிப்பாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது.
இந்த கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்கி தினம் தினம் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் முன்பதிவை தெற்கு ரயில்வே துவங்கியுள்ளது. இந்த ரயில் முன்பதிவானது ஜூலை பன்னிரெண்டாம் தேதி துவங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது போன்ற பண்டிகை நாட்களில் வெளியூரில் வேலை செய்பவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு செல்வர். எனவே இதற்காக பேருந்து மற்றும் ரயில் பயணத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையானது நவம்பர் மாதம் பன்னிரெண்டாம் தேதி கொண்டாடப்பட உள்ளது. எனவே சொந்த ஊருக்கு செல்பவர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதன் காரணமாக பல்வேறு பயணிகள் முன்பே ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய விரும்புவர்.
ஆகையால், பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவானது வருகிற பன்னிரெண்டாம் தேதி துவங்கும் என்று தெற்கு ரயில்வே அதிகாகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த முன்பதிவானது பன்னிரெண்டாம் தேதியில் இருந்து தினமும் நடக்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.