இரவில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை… போக்குவரத்து பாதிப்பு… மக்கள் அதிர்ச்சி!!

0
128

இரவில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை… போக்குவரத்து பாதிப்பு… மக்கள் அதிர்ச்சி…

 

மேட்டுப்பாளையம் அருகே குன்னூர் சாலையில் இரவில் வாகனங்களை மறித்த காட்டு யானை ஒன்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் காட்டு யானை வழியை மறித்ததால் மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காட்டு யானைகள், கரடி, சிறுத்தை, புள்ளி மான்கள், காட்டெருமை உள்ளிட்ட பல விலங்குகள் வசித்து வருகின்றது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் இந்த வனப்பகுதி உள்ளது. இதில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது.

 

கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களின் வனப்பகுதியையும் இணைக்கும் முக்கிய வழித்தடமாக மேட்டுப்பாளையம் வனப்பகுதி அமைந்துள்ளது. இதையடுத்து இந்த பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வது வழக்கமாக உள்ளது.

 

இந்த நிலையில் நேற்று மேட்டுப்பாளையம் குன்னூர் மலைப் பாதையில் இருக்கும் மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் இரண்டு காட்டு யானைகள் வாகனங்கள் செல்லும் வழியை மறித்தது. சாலையின் ஓரத்தில் இரண்டு காட்டு யானைகள் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் வாகனங்களை அப்படியே சாலைகளில் நிறுத்தினர்.

 

இந்த இரண்டு காட்டு யானைகளும் சாலையில் வாகனங்களை மறித்து நின்று கொண்டிருந்தது. இந்த இரண்டு காட்டு யானைகளும் சுமார் அரை மணி நேரம் சாலையில் நின்று கெண்டிருந்தது. வாகனங்கள் முன்னேறி செல்ல பார்த்தும் யானைகள் வாகனங்களை தடுத்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.

 

சுமார் அரை மணி நேரம் சாலையில் நின்று பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த யானைகள் சிறிந்து நேரத்திற்கு பிறகு அங்கிருந்து சென்றது. இதையடுத்து போக்குவரத்தும் சீரானது.

 

Previous articleகலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்… விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
Next articleஇந்திய அணிக்கு எதிரான 4வது டி20 போட்டி… தொடரை கைப்பற்றும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ்…