உடலுக்கு நன்மைகள் தரும் கருப்பு உளுந்து வடை!!! இதை எவ்வாறு செய்வது இதன் நன்மைகள் என்ன!!?

Photo of author

By Sakthi

உடலுக்கு நன்மைகள் தரும் கருப்பு உளுந்து வடை!!! இதை எவ்வாறு செய்வது இதன் நன்மைகள் என்ன!!?

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த கருப்பு உளுந்து வடையை செய்ய தேவையான பொருள்கள் என்ன, எவ்வாறு செய்வது, இதன் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

தோல் உறிக்கப்படாத கருப்பு உளுந்தில் கால்சியம் சத்துக்கள் உள்ளது. மேலும் இரும்புச்சத்துகள், பாஸ்பரஸ், நார்ச்சத்து, பொட்டாசியம் ஆகிய உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றது. இதனால் கருப்பு உளுந்து வடையை சாப்பிடும் பொழுது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றது.

இந்த கருப்பு உளுந்து வடையை செய்யத் தேவையான பொருள்கள்…

* கருப்பு உளுந்து
* வெண்ணெய்
* மிளகுப் பொடி
* இஞ்சி
* கறிவேப்பிலை
* உப்பு
* எண்ணெய்

கருப்பு உளுந்து வடை செய்முறை…

முதலில் கருப்பு உளுந்தை கடாயில் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை மிக்சியில் போட்டு ரவை போல கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதோடு வெண்ணெய், கரறிவேப்பிலை, துருவிய இஞ்சி, மிளகுப் பொடி ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி நன்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளை வேண்டும்.

பின்னர் இந்த மாவை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடான பிறகு வடையாக தட்டி எண்ணெயில் போட்டு எடுக்க வேண்டும். சூப்பரான ஆரோக்கியம் நிறைந்த பல நன்மைகளை தரக்கூடிய கருப்பு உளுந்து வடை தயார்.

கருப்பு உளுந்து வடையின் பயன்கள்…

* தோல் நீக்கப்படாத உளுந்தைக் கொண்டு இந்த வடை செய்யப்படுவதால் இதை சாப்பிடும் பொழுது நம் உடலுக்கு பலத்தை அளிக்கின்றது.

* மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் கருப்பு உளுந்து வடையை செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும்.

* பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கின்றது.

* கருப்பு உளுந்தில் கால்சியம் சத்துக்கள் இருப்பதால் நமது எலும்புக்கு வலிமை தருகின்றது.

* இரும்புச் சத்துக்கள் இருப்பதால் நம் உடலில் இரத்த சோகை நாயின் தாக்கத்தை குறைக்கின்றது.