இரவு நேரத்தில் செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்களா நீங்கள்!!? செல்போன் பாதிப்பில் இருந்து கண்களை பாதுக்காக 20-20-20 முறையை பின்பற்றுங்க!!!

0
82
#image_title

இரவு நேரத்தில் செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்களா நீங்கள்!!? செல்போன் பாதிப்பில் இருந்து கண்களை பாதுக்காக 20-20-20 முறையை பின்பற்றுங்க!!!

செல்போனை அதிகம் பயன்படுத்தும் பொழுது நமது கண்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த பாதிப்புகளில் இருந்து கண்களை பாதுகாத்துக் கொள்ள 20-20-20 முறையை எவ்வாறு பின்பற்றுவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தற்போதைய காலத்தில் செல்போன் பயன்படுத்துவது அதிகமாகி விட்டது. குறிப்பாக இரவு நேரத்தில்செல்போன் பயன்படுத்துவது அதிகமாகிவிட்டது. இதனால் நம் கண்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றது.

குறிப்பாக ஸ்மார்ட்போன்களை இரவு நேரத்தில் அதிகமாக பயன்படுத்தும் பொழுது நமது உடலில் தூக்கத்தை ஏற்படுத்தும் மெலடோனின் சுரப்பை செல்போன்களில் இருந்து வெளியேறும் கதிர்கள் குறைத்து விடுகின்றது. இதனால் இரவு நேரத்தில் தூக்கம் வருவதற்கு நேரம் ஆகும்.

ஸ்மார்ட்போனை அதிகம் பயன்படுத்தும் பொழுது கண்களில் எரிச்சல் ஏற்படும். கண் வலி ஏற்படும். கண்களில் இருந்து நீர் வலியும். மேலும் கண்கள் சிவப்பு நிறத்தில் காணப்படும். மேலும் கண் தொடர்பான பல நோய்களும் ஏற்படும். செல்போன் பாதிப்பில் இருந்து நமது கண்களை பாதுகாக்க 20-20-20 முறையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

20-20-20 முறையை பயன்படுத்துவது…

* 20-20-20 முறை என்பது 20 நிமிடங்கள் கொண்ட ஒரு வழிமுறை ஆகும்.

* அதாவது 20 நிமிடங்கள், 20 நொடிகள், 20 அடி தூரம் ஆகும்.

* அதாவது 20 நிமிடங்கள் செல்போன் பயன்படுத்துவது, அடுத்த 20 நொடிகள் கண்களுக்கு ஓய்வு அளிப்பது, அடுத்து செல்போனை 20 அடி தூரத்தில் வைப்பது ஆகும்.

* நாம் ஸ்மார்ட்போனை 20 நிமிடங்கள் பயன்படுத்திவிட்டு கண்களுக்கு 20 நொடிகள் ஓய்வு அளிக்க வேண்டும். கண்களுக்கு ஓய்வு அளிக்கும் நேரத்தில் ஸ்மார்ட்போனை 20 அடி தூரத்தில் வைக்க வேண்டும்.

* இந்த 20-20-20 முறையை செல்போன் பயன்படுத்தும் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் செய்ய வேண்டும். இந்த முறையை பின்பற்றும் பொழுது நமது கண்கள் பாதுகாப்பாக இருக்கும்.