இதை செய்தால் சளி தொல்லை இனி இல்லை!! உடனே ட்ரை பண்ணுங்க.. கண்டிப்பாக பலன் கொடுக்கும்!!
மழைக்காலங்களில் சளி,இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் வருவது இயல்பு.இதனால் மூக்கடைப்பு,தொண்டை வலி,தொண்டை எரிச்சல உள்ளிட்டவை ஏற்படுகிறது.இதற்கு மருந்து மாத்திரைகளை விட இயற்கை முறையில் தீர்வு காண்பது நல்ல பலனைக் கொடுக்கும்.அதன் படி அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த மிளகு,தூதுவளை,துளசி உள்ளிட்ட பொருட்களை வைத்து அற்புதமான பானம் தயார் செய்து பருகினால் சளி,இருமல் பிரச்சனை உடனடியாக சரியாகி விடும்.
தேவையான பொருட்கள்:-
*மிளகு – 1 தேக்கரண்டி
*சுக்குப்பொடி – 1 தேக்கரண்டி
*தனியா – 2 தேக்கரண்டி
*ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி
*தூதுவளை – 3
*துளசி – 15
*கற்பூரவல்லி – 2
*ஆடாதோடை இலை – 1
*தேன் – தேவையான அளவு
அல்லது
பனை வெல்லம்
செய்முறை:-
அடுப்பில் டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 2 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.
அதன் பின் மிளகு விதை 1 தேக்கரண்டி அளவு சேர்க்கவும்.
பின்னர் கொத்தமல்லி விதை 2 தேக்கரண்டி,சுக்கு பொடி 1 தேக்கரண்டி,ஏலக்காய் பொடி 1/4 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க விடவும்.
அடுத்து மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த துளசி 15 இலைகள்,ஆடாதோடை இலை,தூதுவளை 3 இலை,கற்பூரவல்லி 2 இலை சேர்த்து 2 1/2 டம்ளர் தண்ணீர் 1 1/2 என்று சுண்டி வரும் வரை காத்திருந்து அடுப்பை அணைக்கவும்.
பிறகு 2 நிமிடங்கள் கழித்து ஒரு பவுலில் அதை வடிகட்டி கொள்ள வேண்டும்.தேவைப்பட்டால் தேன் அல்லது பனை வெல்லம் சேர்த்து கலக்கி பருகலாம்.வெள்ளை சர்க்கரை சேர்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இந்த மூலிகை பானத்தில் 1/4 டம்ளர் வரை 5 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.1/2 டம்ளர் வரை 9 முதல் 13 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
பெரியவர்கள் 1 டம்ளர் வரை பருகலாம்.இந்த அற்புத மூலிகை பானத்தை தினமும் 3 வேலை குடிக்க வேண்டும்.இப்படி குடிக்கும் பொழுது சளி,இருமல் பாதிப்பு முற்றிலும் சரியாகி விடும்.
அடிக்கடி சளி பிடிக்கும் நபர்கள் வாரம் ஒருமுறை இந்த பானத்தை தயார் செய்து குடிப்பது மிகவும் அவசியம்.இந்த பானம் செய்ய பயன்படுத்திய மிளகு,சுக்கு,தனியா ஆகிய 3 பொருட்களுமே உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளி தருபவை ஆகும்.
அதேபோல் துளசி,கற்பூரவல்லி,ஆடாதோடை,தூதுவளை ஆகியவை சளியை குணப்படுத்த உதவும் முக்கிய இலைகள் ஆகும்.