“சோம்பு பால்” குடிப்பதினால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்!!

0
116
#image_title

“சோம்பு பால்” குடிப்பதினால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்!!

உடலுக்கு பல வித நன்மைகளை வாரி வழங்கும் சோம்பு பால்.டீ,காபிக்கு பதில் இந்த சோம்பு பால் பருகினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*சோம்பு – 1/2 தேக்கரண்டி

*பால் – 1 டம்ளர்

*நாட்டு சர்க்கரை – 1 தேக்கரண்டி
அல்லது
வெல்லம்

செய்முறை:-

அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் பால் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் அதில் 1/2 தேக்கரண்டி அளவு சோம்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பிறகு அடுப்பை அணைத்து அந்த பாலை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.அதில் 1 தேக்கரண்டி வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கி பருகவும்.

சோம்பு பால் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

*தினசரி உணவில் நாம் பயன்படுத்தும் சோம்பில் மெக்னீசியம்,கால்சியம் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.இவை எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

*தினமும் சோம்பு பால் பருகுவதால் செரிமானக் கோளாறு,வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்பு உள்ளிட்டவை விரைவில் சரியாகிவிடும்.

*சோம்பு பாலில் அதிகளவு இரும்புச் சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இவை உடலில் இரத்த சோகை பாதிப்பை சரி செய்யும் தன்மையை கொண்டிருக்கிறது.

*அதேபோல் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதில் சோம்பு பாலுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

*தினமும் சோம்பு பால் பருகுவதால் கண் புரை,கண் எரிச்சல்,பார்வை கோளாறு சம்மந்தபட்ட பாதிப்பு பாதிப்பு விரைவில் சரியாகும்.

*உடல் பருமன்,இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்பு இருப்பவர்கள் தினமும் சோம்பு பால் பருகுவதன் மூலம் உடனடி தீர்வு கிடைக்கும்.

*அதேபோல் சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் சோம்பு பாலுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

*சோம்பு பாலில் உள்ள பைட்டோநியூட்ரியன்ட்கள் ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

*சோம்பு பாலில் அதிகளவு பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் இருப்பதினால் இவை முகப்பரு வராமல் தடுக்கிறது.அதேபோல் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்த சோம்பு பால் பெரிதும் உதவுகிறது.

Previous articleநீங்கள் தினமும் 50 படிகள் ஏறுபவர்களா!!? அப்போ உங்களுக்கு இந்த நோய் வராது!!!
Next articleபுற்றுநோய் பாதிப்பை தடுக்கும் “சேனைக் கிழங்கு” வறுவல் – சுவையாக செய்வது எப்படி?