1 மணி நேரத்தில் சளி இருமல் பாதிப்பு குணமாக பாட்டி வைத்தியம்!!
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி,இருமல்.இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி விடும்.இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.எந்த நோய் எப்படி வருமென்றே சொல்ல முடியாது.
அதானல் இந்த சளி மற்றும் இருமல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தி கொள்வது மிகவும் முக்கியம்.இதற்கு இயற்கை வழிகளை பாலோ செய்வது மிகவும் சிறந்த ஒன்று.
தேவையான பொருட்கள்:-
*படிகாரத்தூள் -1/2 தேக்கரண்டி
*தூயத் தேன் – 1 தேக்கரண்டி
செய்முறை:-
அடுப்பில் ஒரு தோசை கல் வைத்து அதில் அவற்றை நன்கு சூடு படுத்தவும்.பின்னர் சிறிதளவு படிகாரத்தை எடுத்து அதில் போட்டு நன்றாக உருக விடவும்.
படிகாரம் நன்கு உருகி வந்ததும் அடுப்பை அணைத்துக் கொள்ளவும்.பின்னர் தோசை கல்லை இறக்கி அவற்றை அதில் வைத்தே நன்றாக பொடி ஆகும் வரை இடித்து கொள்ளவும்.
பின்னர் இடித்த படிகாரத்தில் 1/2 தேக்கரண்டி அளவு எடுத்து அதில் 1 தேக்கரண்டி அளவு தூயத் தேன் சேர்த்து கலந்து சாப்பிடவும்.இந்த ரெமிடியை இரவு நேரத்தில் தான் பயன்படுத்த வேண்டும்.
சிறிய குழந்தைகளுக்கு இரண்டு சிட்டிகை அளவு இடித்த பவுடரை எடுத்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட கொடுக்க வேண்டும்.இவ்வாறு செய்வதினால் ஒரு மணி நேரத்தில் சளி மற்றும் இருமல் பிரச்சனை சரியாகிவிடும்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
*வெற்றிலை – 3
*இஞ்சி – சிறு துண்டு
*மிளகு – 10
செய்முறை:-
முதலில் 3 வெற்றிலை எடுத்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
அடுத்து சிறு துண்டு இஞ்சி எடுத்து தோலை நீக்கி கொள்ளவும்.அதை ஒரு உரலில் போட்டு தட்டிக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்கு கொதித்தது வந்ததும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள வெற்றிலை, இடித்த இஞ்சி துண்டு மற்றும் 10 மிளகு சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும்.பின்னர் அடுப்பை அணைத்து இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும்.இவ்வாறு செய்தால் நாள்பட்ட நெஞ்சு சளி,இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் உடனடியாக நீங்கி விடும்.