தினமும் வெந்தயத் தேநீர் அருந்துவதால் இத்தனை நன்மைகளை பெற முடியும்!! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறதா?

0
92
#image_title

தினமும் வெந்தயத் தேநீர் அருந்துவதால் இத்தனை நன்மைகளை பெற முடியும்!! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறதா?

நமது அன்றாட உணவில் வெந்தயத்தின் பங்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த வெந்தயம் குளிர்ச்சி நிறைந்த பொருள் பொருள் என்பதினால் உடல் சூடு, வயிறு எரிச்சல், வயிற்று வலி உள்ளிட்டவைகளை குணப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது.

இந்த வெந்தயத்தில் நார்ச்சத்து, வைட்டமின் சி, புரதம், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்டவை அதிகளவில் அடங்கி இருக்கிறது. இந்த வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிட்டால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். அதேபோல் இதில் தேநீர் செய்து பருகினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த வெந்தயத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.

வெந்தய தேநீர்:-

தேவையான பொருட்கள்:-

*வெந்தயம் – 1 தேக்கரண்டி

*தூயத் தேன் – சிறிதளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம்’வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் 1 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.1 1/2 கிளாஸ் தண்ணீர் 1 கிளாஸ் என்று வரும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து பருகவும்.

வெந்தயத் தேநீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்:-

*செரிமான பிரச்சனை இருப்பவர்கள் 1 தேக்கரண்டி வெந்தயத்தை அப்படியே மென்று சாப்பிட வேண்டும். இதை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் செரிமான பிரச்சனை, வாயு தொல்லை உள்ளிட்டவை சரியாகும். அதேபோல் வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இது உரியத் தீர்வாக இருக்கும்.

*உடல் சூடு அதிகம் இருப்பவர்கள் வெந்தயத் தேநீர் செய்து பருக வேண்டும்.

*நெஞ்சு எரிச்சல், அல்சர் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்படும் நபர்கள் தினமும் வெந்தயத் தேநீர் பருகுவது மிகவும் அவசியம். இப்படி தொடர்ந்து பருகி வருவதன் மூலம் உடலும் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.

*வெந்தயத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் இருக்கிறது. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

*அதேபோல் மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ளிட்ட பாதிப்புக்கும் வெந்தயத் தேநீர் சிறந்த தீர்வாக இருக்கும்.

*மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலியை சரி செய்வதில் வெந்தயத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது.1/2 தேக்கரண்டி வெந்தயத்தை வாயில் போட்டு மென்று சாப்பிடுவதன் மூலம் இந்த பாதிப்பை சரி செய்ய முடியும்.

*கர்ப்பமாக இருக்கும் பெண்கள் முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிடுவதன் மூலம் குழந்தை பிறப்பின் போது சிக்கல் மற்றும் வலி இல்லாமல் இருக்கும்.

*வெந்தயத் தேநீர் தொடர்ந்து பருகி வந்தோம் என்றால் முடி நன்கு வளர்ச்சி அடையும். கூந்தல் மிகவும் மிருதுவாக இருக்கும்.அது மட்டும் இன்றி பேன், பொடுகு தொல்லைக்கும் இவை சிறந்த தீர்வாக இருக்கும்.

*தினசரி உணவில் வெந்தயத்தை சேர்த்து வருவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

*அதேபோல் சரும பாதிப்புக்கும் வெந்தயம் சிறந்த தீர்வாக இருக்கும்.இந்த வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து சருமத்தில் தடவினால் மிகவும் பொலிவாக இருக்கும்.

Previous articleவீட்டில் பணக் கஷ்டம் நீங்க எளிய பரிகாரம்!! 100% தீர்வு கிடைக்கும்!!
Next articleஉடல் எடை கடகடன்னு குறைய “கருஞ்சீரகம் + சுக்கு” போதும்!! ட்ரை பண்ணி பாருங்கள்!!